கீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
- Lord Sani: சனி பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவானால் நற்பலன்களை பெறப்போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
- Lord Sani: சனி பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவானால் நற்பலன்களை பெறப்போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக பதவியை வகித்து வருபவர் சனி பகவான் சிவபெருமானிடம் இருந்து ஈஸ்வரன் பதவியை பெற்ற ஒரு சில பெயர்களில் சனிபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அதன் காரணமாக இவர் சனீஸ்வர பகவான் என அழைக்கப்படுகிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான்.
(2 / 6)
சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். கர்மநாயகனாக விளங்குகின்ற காரணத்தினால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 6)
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது சனிபகவான் பயணம் செய்து வருகின்றார் இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார். சனீஸ்வர பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கு செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவானால் நற்பலன்களை பெறப்போகின்ற ராசிகள் குறித்து காண்போம்.
(4 / 6)
ரிஷப ராசி: சனிபகவானின் மீன ராசி பயணத்தால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் உங்களுக்கு ஆன்மீக யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
(5 / 6)
மிதுன ராசி: சனிபகவானின் பொற்காலத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர் எனும் கணிக்கப்பட்டுள்ளது. நல்ல வருமானம் ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறவுகளில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது.
(6 / 6)
துலாம் ராசி: சனிபகவானின் மீன ராசி பயணத்தால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் தொழிலில் உங்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலக பணிகளில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்