Chevvai Rasis: பின்பக்கமாக வரும் செவ்வாய்.. 2025 முதல் முன்பக்கத்தில் பணம் கொட்டும் ராசிகள்.. விரைவில் டும் டும் டும்?
- Chevvai Rasis: செவ்வாய் பகவான் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Chevvai Rasis: செவ்வாய் பகவான் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவக்கிரகங்களில் கோபத்தின் காரகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு பல முக்கிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இதனால் மனிதனின் வாழ்க்கையின் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
(3 / 6)
கடக ராசியில் தற்போது பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வக்கிர நிலையில் மிதுன ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவான் வக்கிரப் பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செவ்வாய் பகவான் உங்கள் ராசியை மூன்றாவது வீட்டில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் வக்கிர நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயணம் செய்யப் போகின்றார். இதனால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
மற்ற கேலரிக்கள்