ராகு புதன் சேர்க்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ல் சேரும் ராகு புதன்.. குபேர கடலில் நீந்த போகும் 3 ராசிகள்..!
- Rahu Mercury: ராகு மற்றும் புதன் இருவரும் மீன ராசியில் சேர்கின்றனர். ராகு மற்றும் புதன் சேர்க்கையானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Rahu Mercury: ராகு மற்றும் புதன் இருவரும் மீன ராசியில் சேர்கின்றனர். ராகு மற்றும் புதன் சேர்க்கையானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(2 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார்.
(3 / 6)
ராகு பகவான் ஏற்கனவே மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற பிப்ரவரி மாதம் புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இதனால் ராகு மற்றும் புதன் இருவரும் மீன ராசியில் சேர்கின்றனர். ராகு மற்றும் புதன் சேர்க்கையானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்றது இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதிக பணத்தை சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்