விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!-lets see the zodiac signs that should be very careful due to the transit of mercury - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை!

Jan 31, 2024 02:33 PM IST Suriyakumar Jayabalan
Jan 31, 2024 02:33 PM , IST

  • Transit of Mercury: புதன் பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை காண்போம்

நவக்கிரகங்களில் சிறிய கிரகமாக விளங்க கூடியவர் முதல் பகவான். மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படும் புதன் பகவான் நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார். இவர் வியாபாரம், பேச்சு, படிப்பு, அறிவு, கல்வி புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். 

(1 / 6)

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான் இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். 

(2 / 6)

புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று அதாவது நாளை சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 6)

மகர ராசிக்கு இடம் மாறும் புதன் பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றாலும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் சில சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம். 

(4 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் 11 மற்றும் இரண்டாம் இடத்தில் அதிபதியாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே நல்ல பலன்களை தரும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் ஏழாவது வீட்டிற்கு செல்கின்றார். இவர் உங்கள் ராசியின் மூன்று மற்றும் 12வது வீட்டில் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே பயணம் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகளின் மீது எச்சரிக்கை தேவை. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்