குருவின் பண ராசிகள்.. தொடங்கியது ராஜயோகம்
- Guru Bhagavan: குரு பகவானால் இந்த ஆண்டு அமோக ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Guru Bhagavan: குரு பகவானால் இந்த ஆண்டு அமோக ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
தேவர்களின் ராஜகுருவாக விளங்கக்கூடிய குருபகவான் மங்கல நாயகனாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் எப்போதும் நல்ல பலன்களை கொடுக்கும் கிரகமாக கருதப்படுகிறார். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், கல்வி, அறிவு, பேச்சாற்றல் உள்ளிட்டவைகளின் காரணியாக இவர் திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும்.
(3 / 6)
குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் இந்த ராசியில் பயணம் செய்ய உள்ளார். ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றத்தால் அற்புதமான பலன்களை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை இந்த ஆண்டு அள்ளிக் கொடுப்பார். மே மாதம் தொடங்கியது முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து பணவரவு இருக்கும் நல்ல செய்தி உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சுப பலன்கள் உங்களைத் தேடி வரும். எதிர்பார்த்த காரியங்களில் வசதிகள் அமையும்.
(5 / 6)
சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். முன்னேற்றத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பெரிய லாபம் தரக்கூடிய காரியங்கள் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றியடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
(6 / 6)
மிதுன ராசி: குருபகவானின் மாற்றங்கள் காரணமாக உங்களுக்கு சிறப்பான ஆண்டாக இது அமைய உள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்