Kumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
- Kumbha Rasi: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
- Kumbha Rasi: 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான் இவ்வாறு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியபகவான் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் சூரிய பகவான் நுழைகின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சூரிய பகவானின் கும்ப ராசி பயணத்தால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் உங்களுக்கு அதிகரிக்கும். லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
சிம்ம ராசி: சூரிய பகவானால் ஆளப்படும் ராசியான உங்களுக்கு வரும் 2025 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையப்போகின்றது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
தனுசு ராசி: சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறப்பாக மாற்றி தரப் போகின்றது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி பாதுகாப்பு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்