பொங்கல் எந்த திசையில் பொங்கினால் இந்த பலன்களா?.. ஆச்சரியமா இருக்கு.. கவனிச்சு படிச்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பொங்கல் எந்த திசையில் பொங்கினால் இந்த பலன்களா?.. ஆச்சரியமா இருக்கு.. கவனிச்சு படிச்சு பாருங்க!

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் இந்த பலன்களா?.. ஆச்சரியமா இருக்கு.. கவனிச்சு படிச்சு பாருங்க!

Jan 07, 2025 12:44 PM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2025 12:44 PM , IST

  • Pongal 2025: பால் சூடாகி பொங்கும் பொழுது பொங்கலோ பொங்கல் என்று சூரியனை நோக்கி சத்தமிட்டு வழிபாடு செய்வது நமது தமிழ்நாட்டில் பண்பாடாக இருந்து வருகிறது. அந்தப் பானையிலிருந்து பொங்கல் பொங்கி எந்த திசையில் வழிகின்றதோ அதை பொறுத்து சில பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த தைத்திருநாள் முதல்நாள் பொங்கல் பண்டிகை அன்று விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட புதிய பச்சரிசியை கொண்டு பொங்கல் வைப்பார்கள்.  புதிய பானையில் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி, பூ கட்டி பானையை சுற்றி விபூதி பூசி மஞ்சள், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து, அதன் பின்னர் அதில் வாழும் நீரும் ஊற்றி நிரப்பி அடுப்பில் வைத்து பொங்குவார்கள். 

(1 / 7)

இந்த பொங்கல் திருநாள் ஆனது விவசாய நிலத்தை வழங்கிய இந்திரன் மற்றும் சூரியன் உள்ளிட்டவைகளை வழிபாடு செய்யும் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் விவசாயத்திற்கு உதவிய கால்நடைகள், உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்கு நன்றி கூறும் திருநாளாக கொண்டாடப்பட்டது. 

(2 / 7)

அந்த பாலும் மீறும் சூடாகி பொங்கும் பொழுது பொங்கலோ பொங்கல் என்று சூரியனை நோக்கி சத்தமிட்டு வழிபாடு செய்வது நமது தமிழ்நாட்டில் பண்பாடாக இருந்து வருகிறது. அந்தப் பானையிலிருந்து பொங்கல் பொங்கி எந்த திசையில் வழிகின்றதோ அதை பொறுத்து சில பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்பதை உங்கள் பொங்கும் திசையை வைத்து கண்டறியலாம் என நமது முன்னோர்கள் கூறியுள்ளன. அந்த வகையில் எந்த திசையில் பொங்கல் பொங்கினால் எந்த பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

கிழக்கு திசை: பொங்கல் பொங்கும் போது கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால் புதிதாக வீடு மற்றும் நிலம்பு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஏதேனும் வாங்க திட்டமிட்டு இருந்தால் அது விரைவில் நடக்கும் என கூறப்படுகிறது. 

(4 / 7)

மேற்கு திசை: பொங்கல் பானையில் இருந்து உங்கள் மேற்கு திசை நோக்கி பொங்கி வழிந்தால் வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வயதில் வீட்டில் ஏதேனும் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும் எனும் கணிக்கப்பட்டுள்ளது. 

(5 / 7)

வடக்கு திசை: பொங்கல் பொங்கும் போது வடக்கு திசை நோக்கி வழிந்தால் வீட்டில் செல்வம், செழிப்பு, பண வரவு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு விரைவில் வேலை கிடைக்க கூடும் என நம்பப்படுகிறது. 

(6 / 7)

தெற்கு திசை: பொங்கல் பானையில் இருந்து பால் தெற்கு திசை நோக்கி பொங்கி வழிந்தால், அந்த ஆண்டு உங்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. மிகுந்த மனச்சோர்வு ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கு சட்ட தாமதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது என அறிவுறுத்தப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்