சனியை தாவி பிடித்த சூரியன்.. 3 ராசிகளுக்கு உச்சகட்டம்
- Lord Sun: சூரிய பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Lord Sun: சூரிய பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தார்.. அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் தினமாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைந்தார்.
(2 / 6)

(3 / 6)
இது சனி பகவானின் சொந்த ராசியாகும். ஏற்கனவே சனி பகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சூரிய பகவான் புகுந்துள்ளதால் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சூரிய பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
(5 / 6)
தனுசு ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதே சமயம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(6 / 6)
கும்ப ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். ஜாதகத்தில் உங்கள் அதிபதியாக சூரிய பகவான் திகழ்ந்து வருகின்றார். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து வழங்குவார்கள். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்