சனி நிறுத்தாமல் கொட்டுவார்.. பணமழை பொழியும் ராசிகள்
- Saturn Transit: சனி பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Saturn Transit: சனி பகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 8)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார்.
(2 / 8)
கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானை அனைவரும் கண்டால் அச்சப்படுவார்கள். ஏனென்றால் நன்மை தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 8)
இவருடைய சொந்த ராசியாக கும்ப ராசி திகழ்ந்து வருகின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 8)
அந்த வகையில் சனிபகவான் வரும் மார்ச் 18ஆம் தேதி அன்று உதயமாக உள்ளார் சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 8)
மேஷ ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு மகிழ்ச்சி உண்டாகும்.
(6 / 8)
ரிஷப ராசி: சனி பகவானின் உதயமானது உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(7 / 8)
சிம்ம ராசி: சனியின் உதயம் உங்களுக்கு சிறப்பான காலமாக அமைந்துள்ளது. இதுவரை தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மற்ற கேலரிக்கள்