கொட்டும் பண மழையோடு வரும் குரு.. அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்
- Guru Peyarchi: குருபகவான் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.
- Guru Peyarchi: குருபகவான் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 7)
குருபகவான் ரிஷப ராசிக்கு இடம் வரும் பொழுது கார்த்திகை, மிருகசீரிடம், ரோகிணி உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: குருபகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டில் அமர போகின்றார். உங்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
(5 / 7)
ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு தொடர்ச்சியான நன்மைகளை செய்யப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.
(6 / 7)
மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றார். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்