குருவை துரத்தி வரும் செவ்வாய்.. சேர்க்கையில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவங்கதான்
- Guru Mars: குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு ஒரு ஆண்டு காலம் இந்த ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
- Guru Mars: குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு ஒரு ஆண்டு காலம் இந்த ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
(1 / 6)
நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.
(3 / 6)
குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அதற்குப் பிறகு ஒரு ஆண்டு காலம் இந்த ராசியில் பயணம் செய்வார். வருகின்ற ஜூன் மாதத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். இதனால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிக்கிக்கிடந்த பணம் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
(5 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல யோகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மங்கள யோகம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். லாபத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்