Jackpot: பணக்கடலில் உதித்து விட்டார் குரு.. ரிஷப யோகத்தில் நனையும் ராசிகள்.. சிக்கியவர்களுக்கு ராஜ வாய்ப்பு
- Guru Bhagwan: ரிஷப ராசியில் உதயமாகும் குரு பகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவித்த பிரகாசிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
- Guru Bhagwan: ரிஷப ராசியில் உதயமாகும் குரு பகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவித்த பிரகாசிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
தேவர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய குருபகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமனத்தால் பல ராசிகளுக்கு கிடைக்க விருந்த நன்மைகள் அப்படியே தடைபடும். ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் மீண்டும் உதயமாகின்றார்.
(3 / 6)
ரிஷப ராசியில் உதயமாகும் குரு பகவானால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவித்த பிரகாசிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வெற்றிப் பயணம் தொடங்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் உதயமாகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்