குருவோடு சேர்ந்து அடிக்கப் போகும் சுக்கிரன்.. படாதபாடு படப்போகும் ராசிகள்
- குரு மற்றும் சுக்கிரனால் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.
- குரு மற்றும் சுக்கிரனால் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை குரு பகவான் தனது இடத்தை மாற்றுவார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்ட யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 6)
சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், மகிழ்ச்சி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார்.
(3 / 6)
குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறு மற்றும் எட்டாவது வீட்டை பார்க்கின்றனர். இதனால் ஷடாஸ்டக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் பார்வையால் உங்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும். திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
கன்னி ராசி: சுக்கிரன் மற்றும் குருவால் உருவாக்கிய யோகத்தால் சில சிக்கல்கள் ஏற்பட உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. காதல் வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
மீன ராசி: கவனமாக இருப்பது அவசியமாகும். குரு மற்றும் சுக்கிரன் சில தடைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வெளியே பயணம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களோடு மனக்கசப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்