சனி மீது அமைதியாக அமர்ந்த சூரியன்.. பணவரவில் உச்சம் செல்ல போகும் ராசிகள்
- Sun transit: சனி மற்றும் சூரியன் சேர்ந்து சொர்க்க யோகத்தை கொடுக்க போகின்ற ராசிகளை காண்போம்.
- Sun transit: சனி மற்றும் சூரியன் சேர்ந்து சொர்க்க யோகத்தை கொடுக்க போகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 8)
கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். நவக்கிரகங்களில் அதிக காலம் எடுத்துக் கொள்ளும் கிரகமாக சனிபகவான் விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 8)
செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
(3 / 8)
நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்துவரும் சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றத்தினால் பல்வேறு விதமான பலன்கள் 12 ராசிகளுக்கும் கிடைக்கும் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசியில் நுழைந்தார்.
(4 / 8)
இந்நிலையில் சூரிய பகவான் தற்போது சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நிகழ உள்ளது. அதே சமயம் சனி பகவானும் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இருவரும் ஒரே ராசியில் இணைய உள்ளனர்.
(5 / 8)
சனி மற்றும் சூரியன் கும்ப ராசியில் இணைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(6 / 8)
சிம்ம ராசி: சனி மற்றும் சூரியன் சேர்க்கை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சூரிய பகவான் உங்கள் ராசியில் இருந்து ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(7 / 8)
தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். சனி மற்றும் சூரியன் சேர்க்கை உங்களுக்கு ஜாதகரீதியாக முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரித்து நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தந்தை வழி பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்