ராகுவை மார்ச்சில் பிடிக்கும் புதன்.. 3 ராசிகளுக்கு பணமழை
- Lord Rahu Mercury: ராகுவும் புதனும் சேர்ந்து யோகத்தை கொடுக்கப் போகின்ற ராசிகளை காண்போம்.
- Lord Rahu Mercury: ராகுவும் புதனும் சேர்ந்து யோகத்தை கொடுக்கப் போகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் ராகு பகவான் அசுப கிரகமாக கருதப்பட்டு வருகிறார் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக இடம் மாறக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார் ராகு பகவான் ஒரு ராசிகள் சஞ்சாரம் செய்ய 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 6)
கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, செல்வம், புத்திக்கூர்மை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான்.
(3 / 6)
மீன ராசியில் பயணம் செய்து வரும் அதே நிலையில் வரும் மார்ச் மாதம் புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இதன் காரணமாக ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் பத்தாம் வகுப்பு வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. வியாபாரம் மற்றும் வேலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் நடக்கும்.
மற்ற கேலரிக்கள்