பணத்தில் நனைக்க போகும் ராகு கேது.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்
- Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் உச்ச வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
- Rahu Ketu Transit: ராகு கேது பகவானால் உச்ச வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் ராகு கேது அசுப கிரகங்களாக விளங்கி வருகின்றனர். எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய இவர்கள், சேர்ந்தே பயணம் செய்யக் கூடியவர்கள் சனி பகவானுக்கு பிறகு ராகுல் கேதுவை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விலகி வருகின்றனர்.
(2 / 6)
ராகு மற்றும் கேது பதினெட்டு மாதங்கள் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடியவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர்.
(3 / 6)
இந்த ஆண்டு முழுவதும் ஒரே ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் அதிரடி அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: ராகு கேது உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். ஏனென்றால் உங்களது ஏழாவது வீட்டில் இவர்கள் பயணம் செய்து வருகின்றனர். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். இது நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும் புதிய முயற்சிகள் கைகூடும்.
(5 / 6)
ரிஷப ராசி: ராகு மற்றும் கேது உங்களது ஆறாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வெளிநாட்டில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
(6 / 6)
மிதுன ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு சுக பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தைகளால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்