Sukra: சுக்கிர பெயர்ச்சி செய்யப் போகும் மாற்றம்.. இந்த ராசிகளுக்கு யோகம்
Venus Transit 2024: சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் அதிகப்படியான பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
நவகிரகங்களில் காதல் நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் தலைவனாக இருந்து வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சுக்கிர பகவான் சொகுசு, காதல், ஆடம்பரம், திருமண வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கிரகங்களைப் போலவே சுக்கிர பகவான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தனது இடத்தை மாற்றக் கூடியவர். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் உண்டாகும். சுக்கிர பகவான் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியிலும் வரும் மார்ச் மாதத்தில் மீன ராசியிலும் இடம் மாறி பயணம் செய்ய உள்ளார்.