தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Will Get Excellent Results Due To The Fact That The Direct Journey Of Lord Mercury Has Started

வக்ர நிவர்த்தி பணமழை தரும் புதன்.. 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

Jan 21, 2024 11:57 AM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 11:57 AM , IST

  • Transit of Mercury: புதன் பகவானின் நேரான பயணம் தொடங்கியுள்ள காரணத்தினால் சிறப்பான பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தில் மாற்றுவதால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படுவது வழக்கம். 

(1 / 7)

அந்த வகையில் புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புதன் பகவான் புத்திசாலித்தனம் பேச்சு, அறிவு, பகுத்தறிவு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.  

(2 / 7)

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் சீரான நிலையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி மற்றும் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதன் பகவான் இதுவரை பின்னோக்கிய பயணமாக வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார். 

(3 / 7)

இந்நிலையில் புதன் பகவான் ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். இவருடைய நேரான பயணம் தற்போது ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. அப்படி சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் உருவாகும்.

(5 / 7)

துலாம் ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் நான்காவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். புதன் பகவானும் சூரிய பகவானும் நட்பு கிரகங்கள் என்பதால் உங்களுக்கு அனுகூலமான சுப பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்