தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Rajayoga Through The Combination Of Rahu And Mercury

பணமழை வாழ்க்கை தரும் ராகு கேது.. 3 ராசிகளுக்கு யோகம்

Feb 13, 2024 02:06 PM IST Suriyakumar Jayabalan
Feb 13, 2024 02:06 PM , IST

  • Rahu and Mercury: ராகு மற்றும் புதன் சேர்க்கை மூலம் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். மற்ற கிரகங்களோடு ஒப்பிடுகையில் இவர் மிகவும் தாமதமாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருந்து வருகிறார். 

(1 / 7)

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான் 

(2 / 7)

இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மார்ச் மாதம் புதன் பகவான் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் நுழைகின்றார். 

(3 / 7)

இதன் காரணத்தினால் ராகு மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேருகின்றனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்க உள்ளது. இவர்களுடைய சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 7)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முடிவுகள் அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு பகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்கின்றனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இந்த காலத்தில் உங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் தேடி வரும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்