குரு மே மாதம் கொட்டுவார்.. பணக்கடலில் மிதக்க போகும் ராசிகள்
- Guru Peyarchi: குருபகவானால் மே மாதத்தில் இருந்து யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Guru Peyarchi: குருபகவானால் மே மாதத்தில் இருந்து யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 8)
நவகிரகங்களின் ராஜ குருவாக விளங்க கூடியவர் குரு பகவான். மங்கல நாயகனாக விளங்கக்கூடிய இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.
(2 / 8)
குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் குரு பகவான். குரு பகவான் எப்போதும் நல்லது செய்யக்கூடியவர். இடமாற்றத்தால் அவ்வப்போது அசுப பலன்களை கொடுக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகின்றது.
(3 / 8)
குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசிக்குள் குரு பகவான் வருகின்றார்.
(4 / 8)
குரு பகவானின் ரிஷப சஞ்சாரம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(5 / 8)
மேஷ ராசி: குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(6 / 8)
ரிஷப ராசி: குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும்.
(7 / 8)
மிதுன ராசி: மங்களகரமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான பல வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.
(8 / 8)
தனுசு ராசி: இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறனை குருபகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். இவருடைய சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்