Tamil News  /  Photos  /  Let Us See The Rasis Enjoying Raja Yoga Formed By Sun And Mars Together

Sun and Mars: கை கோர்த்த செவ்வாய் சூரியன்.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2024 05:48 PM IST

சூரியனும் செவ்வாயும் சேர்ந்து உருவாக்குகின்ற ராஜ யோகத்தை அனுபவிக்கும் ராசிகளை காண்போம்.

சூரிய பகவான், செவ்வாய் பகவான்
சூரிய பகவான், செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, துணிவு, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளின் தலைவனாக திகழ்ந்து வருகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சூரிய பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகிறார். அதே சமயம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மகர ராசியின் உள்ளே நுழைகிறார். சூரியன் மற்றும் செவ்வாய் இணைப்பானது ஆதித்ய மங்கள யோகத்தை உருவாக்க உள்ளது. இந்த யோகத்தால் பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர். புதிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் உருவாகும் சாதகமான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்பட உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கன்னி ராசி 

 

புதிய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இதுவரை பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மனதில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

வாழ்க்கையில் உற்சாகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த தடைகள் விளங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். பேச்சு திறமையால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு குறையும். புதிய முயற்சிகள் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்