சூரியனை ஊடுருவிய செவ்வாய்.. 3 ராசிகளுக்கு மங்கள மழை
- Sun and Mars: சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Sun and Mars: சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். சூரிய பகவானின் இடமாற்றம் மிகும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக கூறப்படுகிறது. தற்போது சூரிய பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகிறார்.
(2 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, துணிவு, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளின் தலைவனாக திகழ்ந்து வருகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(3 / 6)
சூரிய பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகிறார். அதே சமயம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மகர ராசியின் உள்ளே நுழைகிறார். சூரியன் மற்றும் செவ்வாய் இணைப்பானது ஆதித்ய மங்கள யோகத்தை உருவாக்க உள்ளது. இந்த யோகத்தால் பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர். புதிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் உருவாகும் சாதகமான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்பட உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
(5 / 6)
கன்னி ராசி: புதிய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இதுவரை பணியில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மனதில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் குறையும். நம்பிக்கை அதிகரிக்கும்.
(6 / 6)
துலாம் ராசி: வாழ்க்கையில் உற்சாகமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த தடைகள் விளங்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். பேச்சு திறமையால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்டு வந்த மனக்கசப்பு குறையும்.
மற்ற கேலரிக்கள்