ராகுவை விடாமல் துரத்தும் புதன்.. 3 ராசிகளுக்கு யோகம்
- Transit of Mercury: ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Transit of Mercury: ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் அசுப கிரகமாக கருதப்படக் கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகுபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
(2 / 7)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகுபகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 7)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
தற்போது ராகு பகவான் பயணம் செய்தவரும் மீன ராசியில் வரும் மார்ச் மாதத்தில் புதன் பகவான் நுழைகின்றார். ராகு மற்றும் புதன் சேர்க்கை 15 ஆண்டுகளுக்குப் பின் நிகழ உள்ளது. இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
(5 / 7)
கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் சாதகமாக முடிவடையும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறையும். நல்ல வருமானத்திற்கான ஆதாயம் உண்டாகும். பேச்சு திறமையால் காரியம் வெற்றி அடையும்.
(6 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் சிறப்பான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிபடையும்.
(7 / 7)
கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழவுள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் நினைத்தபடி நிறைவேறும்
மற்ற கேலரிக்கள்