குரு குதூகலிக்க போகிறார்.. கிருத்திகை நட்சத்திரத்தில் அதிரடி.. வாழையடி வாழையாய் வாழப் போகும் ராசிகள்..!
- Nakshatra transit: ஏப்ரல் 17ஆம் தேதி அன்று குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்துள்ளார்.
- Nakshatra transit: ஏப்ரல் 17ஆம் தேதி அன்று குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்துள்ளார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருந்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 6)
இந்த ஆண்டு குரு பகவான் இடப்பெயர்ச்சி செய்யப் போகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார். அது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது பல்வேறு விதமான செயல்பாடுகளும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று குரு பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்துள்ளார். இது ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அந்த ராசிகள் எது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தை அதிகரித்துக் கொடுக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நல்ல வரன்கள் உங்களை தேடி வரும். பல இடங்களில் புதிய முதலீடுகள் செய்திருந்தால் உங்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல அதிகரிப்பை கொடுக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
(6 / 6)
கடக ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருகின்ற நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திடீரென பண வரவு அதிகரிக்கும் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்