சிக்கிக்கொண்ட 2 ராசிகள்.. புதனிடம் தப்பிப்பது கடினம்
- Transit of Mercury: புதன் பகவானிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காண்போம்.
- Transit of Mercury: புதன் பகவானிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, அறிவு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
புதன் பகவான் ஒவ்வொரு முறையும் ராசியை மாற்றும் பொழுதும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குறுகிய காலத்தில் இடம் மாறுகின்ற காரணத்தினால் சுப மற்றும் அசுப பலன்கள் வெகு விரைவில் முடிந்து விடும்.
(3 / 7)
இந்நிலையில் புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சுந்தர் ஆசியான மகர ராசியில் நுழைந்தார். சனி பகவானும் புதன் பகவானும் நட்பு கிரகமாக இருந்தாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்க உள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் சிரமப்படப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 7)
கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நுழைந்து பயணம் செய்து வருகின்றார். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணத்தை சேமித்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மதிப்புமிக்க பொருட்களின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 7)
இந்த காலகட்டத்தில் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இடமாற்றம் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். தொழிலில் பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது யோசிக்க வேண்டும்.
(6 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையாக அமைந்துள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும்.
மற்ற கேலரிக்கள்