அஸ்தமனத்தில் அடிதடி செய்ய போகும் புதன்.. மாட்டினா அடி உறுதி
- Transit of Mercury: புதன் பகவானிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
- Transit of Mercury: புதன் பகவானிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் காதல், கல்வி, பகுத்தறிவு, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்த வருகின்றார். கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனம் ஆனார். இவருடைய அனைத்து வித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.
(3 / 6)
புதன் பகவானின் அஸ்தமனம் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கின்ற காரணத்தினால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு வேலையில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட முடிவை எடுப்பதற்கு முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் அஸ்தமிக்கின்றார். உங்களுக்கு பணம் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு வணிகம் முயற்சிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமிக்கின்றார். உங்களுக்கு பண இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் மன அழுத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்