குருவை பதறாமல் பிடித்த செவ்வாய்.. 3 ராசிகளுக்கு அபூர்வ யோகம்
- குருவும் செவ்வாயும் சேர்ந்து நல்ல பலன்கள் கொடுக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.
- குருவும் செவ்வாயும் சேர்ந்து நல்ல பலன்கள் கொடுக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்வார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்கள். அப்போது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடிய செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
(3 / 7)
தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். அதே சமயம் வரும் ஜூலை 12ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.
(4 / 7)
குரு மற்றும் செவ்வாய் பகவான் இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை மாதம் ஒன்று சேரப் போகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அபரிமிதமான வெற்றிகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் மற்றும் குருபகவான் இருவரும் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில் செய்யக்கூடிய புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
(6 / 7)
ரிஷப ராசி: புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் செயலுக்கு ஏற்ப நல்ல பிரதிபலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் யோகம் பிறந்துள்ளது. குரு மற்றும் செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இவர்களுடைய சேர்க்கை உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது.
மற்ற கேலரிக்கள்