தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The People Of The Zodiac Who Are Going To Suffer Due To Lord Mercury

மகரத்தில் சாட்டையடி தரும் புதன்.. 3 ராசிகளுக்கு அடி உறுதி

Feb 21, 2024 01:56 PM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 01:56 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இருப்பினும் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகவும் அதிகமாக இருக்கும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி ஆகியவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் அந்த ராசியில் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று அஸ்தமனமானார். 

(2 / 6)

இவருடைய அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில காரியங்கள் நடப்பதற்கு காத்திருக்க வேண்டும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழில் முயற்சிகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்க கூடும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்