தமிழ் செய்திகள்  /  புகைப்பட  /  விளையாட்டை தொடங்கிய செவ்வாய்.. மாட்டிக் கொண்ட ராசிகள்.. சிக்கல்கள் உறுதி.. உங்க ராசி என்ன?

விளையாட்டை தொடங்கிய செவ்வாய்.. மாட்டிக் கொண்ட ராசிகள்.. சிக்கல்கள் உறுதி.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
May 17, 2024 05:08 PM IST

Lord Mars: மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் அது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டை தொடங்கிய செவ்வாய்.. மாட்டிக் கொண்ட ராசிகள்.. சிக்கல்கள் உறுதி.. உங்க ராசி என்ன?
விளையாட்டை தொடங்கிய செவ்வாய்.. மாட்டிக் கொண்ட ராசிகள்.. சிக்கல்கள் உறுதி.. உங்க ராசி என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தால் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.

மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் அது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பனிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். எதிரியாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாக்குவாதம் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களோடு சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். நிதி ரீதியாக உங்களுக்கு இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். முதல் ரீதியாகவும் மனரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க கூடும். சிறிய வேலையாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கடுமையான வாக்குவாதம் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel