HBD Sushant Singh: எம்.எஸ்.தோனியாக மக்கள் மனதை வென்ற சுஷாந்த் சிங்க்கின் பிறந்தநாள் இன்று!
- HBD Sushant Singh: சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த சில நாட்களிலே மக்கள் மனதில் சிம்மாசனமிட்ட சுஷாந்த் சிங்கின் பிறந்தநாள் இன்று.
- HBD Sushant Singh: சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்த சில நாட்களிலே மக்கள் மனதில் சிம்மாசனமிட்ட சுஷாந்த் சிங்கின் பிறந்தநாள் இன்று.
(1 / 7)
பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கி சில நாட்களுக்குள்ளே, தன் திறமையால் இந்தியா முழுக்க அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
(2 / 7)
கிரிக்கெட்டை பிடிக்கும் என சொல்பவர்களுக்கு சுஷாந்த் சிங்கை தெரியாமல் இருக்கவே முடியாது. காரணம், இவர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவரைப் போலவே தோற்றம் கொண்டு நடித்து அசத்தி இருப்பார்.
(3 / 7)
சின்னத் திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர், தேர்ந்தெடுக்கும் கதைகளின் வழியே மக்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றார். ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.
(4 / 7)
இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில், பல்வேறு தனிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சுஷாந்த், மும்பையில் உள்ள அவரது குடியிருப்பிலேயே தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
(5 / 7)
இத்தகவலை அறிந்த போலீசார் இதுகுறித்து விசாரிக்கையில் இது தற்கொலை அல்ல கொலை என கூறி, விசாரணையின் கோணத்தை மாற்றி, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.
(6 / 7)
இவர் மரணத்தின் போது இவருக்கு வெறும் 34 வயது தான். படங்களில் மரணத்திற்கு எதிராக போராடுபவராக நடித்து அசத்திய இவர் நிஜ வாழ்க்கையில் அப்படி செய்யாமல் விட்டு விட்டதாக அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மற்ற கேலரிக்கள்