'நான் எக்ஸ்போ நடக்கும்போதுகூட 8 மணிநேரம் நல்லாத்தூங்குவேன்.. நான் சீன் போடலைங்க’: லட்சுமி பொட்டிக் புகழ் ஆனந்தி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  'நான் எக்ஸ்போ நடக்கும்போதுகூட 8 மணிநேரம் நல்லாத்தூங்குவேன்.. நான் சீன் போடலைங்க’: லட்சுமி பொட்டிக் புகழ் ஆனந்தி பேட்டி!

'நான் எக்ஸ்போ நடக்கும்போதுகூட 8 மணிநேரம் நல்லாத்தூங்குவேன்.. நான் சீன் போடலைங்க’: லட்சுமி பொட்டிக் புகழ் ஆனந்தி பேட்டி!

Published Mar 28, 2025 07:05 PM IST Marimuthu M
Published Mar 28, 2025 07:05 PM IST

  • சோசியல் மீடியாவில் சேலை விற்பனையாளராக இருந்து சோசியல் மீடியா செலிபிரட்டியாக வளர்ந்திருக்கும் ஆனந்தி பிரகாஷின் சமீபத்திய நேர்காணல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சோசியல் மீடியாவில் லட்சுமி பொட்டிக் என்னும் சமூக வலைதளப்பக்கம் மூலம் சேலை விற்பனையைத் தொடங்கியவர், ஆனந்தி பிரகாஷ். தற்போது தனி இணையதளம் மூலம் இந்த தொழிலை செய்துவருகிறார். இந்நிலையில், இவரது ஒவ்வொரு சேலை புரொமோஷன் வீடியோக்களுக்கும் சேலைக்காக மட்டுமல்லாது, அவரது நடிப்புக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.இந்நிலையில் ஆனந்தி பிரகாஷிடம், கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் கடந்த மார்ச் 15,16ஆம் தேதி வெளியானது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

(1 / 6)

சோசியல் மீடியாவில் லட்சுமி பொட்டிக் என்னும் சமூக வலைதளப்பக்கம் மூலம் சேலை விற்பனையைத் தொடங்கியவர், ஆனந்தி பிரகாஷ். தற்போது தனி இணையதளம் மூலம் இந்த தொழிலை செய்துவருகிறார். இந்நிலையில், இவரது ஒவ்வொரு சேலை புரொமோஷன் வீடியோக்களுக்கும் சேலைக்காக மட்டுமல்லாது, அவரது நடிப்புக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் ஆனந்தி பிரகாஷிடம், கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் கடந்த மார்ச் 15,16ஆம் தேதி வெளியானது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

எந்தத் துறையாக இருந்தாலும் போட்டி, பொறாமை இருக்கும். உங்களுக்கு சமீபத்தில் மத்தவங்க பிசினஸை பார்த்து பொறாமைப்படுறீங்கன்னு கமெண்ட்ஸ் வந்தது இல்லையா?. அதை எப்படி பார்த்தீங்க?.‘எனக்குப் பணம் போதும்ன்னு சொல்ற அளவுக்கு இருக்கு. ஒரு பையன். நல்ல ஃபேமிலி. நான் ஃபேமிலி மெம்பர்ஸோட தான் இருக்கேன். எனக்கு மக்கள் கொடுத்ததைத் தக்கவைச்சிக்கிட்டாலே போதும். எனக்கு யார்மேலும் பொறாமை இல்லை. நான் என்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் என்னுடைய கஷ்டங்களைக் காட்டியது இல்லை. நெகட்டிவ் ஆக எல்லாம் ஷோ செய்தது இல்லை. புதுசா வருகிறவங்களுக்கும் அதுதான் சொல்றேன். என்னை ஒப்பிட்டு எல்லாம் ஒன்னும் ஆகப் போறது இல்லை. நான் பதிலுக்கு ஒரு வீடியோ எல்லாம் போடுறது இல்லை. நான் என்னுடைய வேலையை மட்டுமே பார்க்கிறேன். அவ்வளவு தான்’.

(2 / 6)

எந்தத் துறையாக இருந்தாலும் போட்டி, பொறாமை இருக்கும். உங்களுக்கு சமீபத்தில் மத்தவங்க பிசினஸை பார்த்து பொறாமைப்படுறீங்கன்னு கமெண்ட்ஸ் வந்தது இல்லையா?. அதை எப்படி பார்த்தீங்க?.

‘எனக்குப் பணம் போதும்ன்னு சொல்ற அளவுக்கு இருக்கு. ஒரு பையன். நல்ல ஃபேமிலி. நான் ஃபேமிலி மெம்பர்ஸோட தான் இருக்கேன். எனக்கு மக்கள் கொடுத்ததைத் தக்கவைச்சிக்கிட்டாலே போதும். எனக்கு யார்மேலும் பொறாமை இல்லை. நான் என்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் என்னுடைய கஷ்டங்களைக் காட்டியது இல்லை. நெகட்டிவ் ஆக எல்லாம் ஷோ செய்தது இல்லை. புதுசா வருகிறவங்களுக்கும் அதுதான் சொல்றேன். என்னை ஒப்பிட்டு எல்லாம் ஒன்னும் ஆகப் போறது இல்லை. நான் பதிலுக்கு ஒரு வீடியோ எல்லாம் போடுறது இல்லை. நான் என்னுடைய வேலையை மட்டுமே பார்க்கிறேன். அவ்வளவு தான்’.

பெரிய கடை வைச்சிருக்கவங்க கூட இப்படி பேச மாட்டாங்க அப்படின்னு கமெண்ட் வருவதை எப்படி பார்க்குறீங்க?‘அப்படின்கிறீங்க. ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லையா. நான் நிறைய பேசுறதைப் பார்த்து நிறைய பிடிச்சவங்களும் இருக்காங்க. பிடிக்காதவங்களும் இருக்காங்க. பிடிச்சவங்க லைக் பண்ணுங்க. பிடிக்காதவங்க என்னை பிளாக் பண்ணிடுங்க’.

(3 / 6)

பெரிய கடை வைச்சிருக்கவங்க கூட இப்படி பேச மாட்டாங்க அப்படின்னு கமெண்ட் வருவதை எப்படி பார்க்குறீங்க?

‘அப்படின்கிறீங்க. ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லையா. நான் நிறைய பேசுறதைப் பார்த்து நிறைய பிடிச்சவங்களும் இருக்காங்க. பிடிக்காதவங்களும் இருக்காங்க. பிடிச்சவங்க லைக் பண்ணுங்க. பிடிக்காதவங்க என்னை பிளாக் பண்ணிடுங்க’.

எதுக்கு இவ்வளவு சீன் போடுறீங்கன்னு ஒரு கமெண்ட் வந்திருக்கு. அதை எப்படிப் பார்க்குறீங்க?‘சீன் என்றால் நீங்க எதை சொல்ல வர்றீங்க. சீன் எந்த கேட்டகிரியில் வருது. நான் தட்டுவடை சாப்பிட்டேன் என்றால், சேலம் வர்றதாக நீங்கப் புரிஞ்சுக்கிறீங்க. இதை நான் புரொமோஷனாகப் பார்க்கிறேன். இதை சீனாகப் பார்த்தீர்கள் என்றால் நான் என்ன சொல்றது’.

(4 / 6)

எதுக்கு இவ்வளவு சீன் போடுறீங்கன்னு ஒரு கமெண்ட் வந்திருக்கு. அதை எப்படிப் பார்க்குறீங்க?

‘சீன் என்றால் நீங்க எதை சொல்ல வர்றீங்க. சீன் எந்த கேட்டகிரியில் வருது. நான் தட்டுவடை சாப்பிட்டேன் என்றால், சேலம் வர்றதாக நீங்கப் புரிஞ்சுக்கிறீங்க. இதை நான் புரொமோஷனாகப் பார்க்கிறேன். இதை சீனாகப் பார்த்தீர்கள் என்றால் நான் என்ன சொல்றது’.

ஓவர் ஆக்டிங். சராசரி பெண் மாதிரி பேசமாட்டிங்றீங்க. நீங்க மட்டும் 24*7 வேலை பார்க்கிறமாதிரி சீன் போடுறீங்க. நிறையப் பெண்கள் அமைதியான முறையில் வேலைப் பார்க்கிறாங்க. யாரும் உங்களவுக்கு ஆட்டியூட் காட்டியது இல்லை. இந்த கமெண்ட்டை எப்படி பார்க்குறீங்க?'ஆட்டியூட்னு எதைச் சொல்றாங்கன்னு தெரியல. நான் 24*7 வேலை பார்த்ததே கிடையாது. ஹவுஸ் வொய்ஃப் ஆக இருக்கிறவங்க கூட 8 மணி நேரம் தூங்குவாங்கலான்னு தெரியல. நான் 8 மணி நேரம் நல்லாத் தூங்குவேன். எக்ஸ்போ நடக்கும்போது கூட 8 மணிநேரம் நல்லாத் தூங்குவேன். அதில் மாற்றமே இல்லை. நான் மட்டும் தான், இந்த பொட்டிக்கை மேல கொண்டுவந்து நிறுத்துனேன் சொன்னதே இல்லை. ஒரு விரலில் என்னால் சாப்பிட முடியாது.ஐந்துவிரலில் தான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். என்னை சுத்தி நாலைஞ்சு பேர் இருக்காங்க. நான் ஜிம் போவேன், ஃபிரெண்ட்ஸ் ஓட வெளியில் போவேன், ஃபேமிலியோட வெளியில் போவேன், வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை பார்க்கிறேன். மே மாதம் ஆனால் நான் வேலை செய்யமாட்டேன். ஜனவரி மாதம் பாதி நான் வேலை செய்யமாட்டேன்'.

(5 / 6)

ஓவர் ஆக்டிங். சராசரி பெண் மாதிரி பேசமாட்டிங்றீங்க. நீங்க மட்டும் 24*7 வேலை பார்க்கிறமாதிரி சீன் போடுறீங்க. நிறையப் பெண்கள் அமைதியான முறையில் வேலைப் பார்க்கிறாங்க. யாரும் உங்களவுக்கு ஆட்டியூட் காட்டியது இல்லை. இந்த கமெண்ட்டை எப்படி பார்க்குறீங்க?

'ஆட்டியூட்னு எதைச் சொல்றாங்கன்னு தெரியல. நான் 24*7 வேலை பார்த்ததே கிடையாது. ஹவுஸ் வொய்ஃப் ஆக இருக்கிறவங்க கூட 8 மணி நேரம் தூங்குவாங்கலான்னு தெரியல. நான் 8 மணி நேரம் நல்லாத் தூங்குவேன். எக்ஸ்போ நடக்கும்போது கூட 8 மணிநேரம் நல்லாத் தூங்குவேன். அதில் மாற்றமே இல்லை. நான் மட்டும் தான், இந்த பொட்டிக்கை மேல கொண்டுவந்து நிறுத்துனேன் சொன்னதே இல்லை. ஒரு விரலில் என்னால் சாப்பிட முடியாது.

ஐந்துவிரலில் தான் நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். என்னை சுத்தி நாலைஞ்சு பேர் இருக்காங்க. நான் ஜிம் போவேன், ஃபிரெண்ட்ஸ் ஓட வெளியில் போவேன், ஃபேமிலியோட வெளியில் போவேன், வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை பார்க்கிறேன். மே மாதம் ஆனால் நான் வேலை செய்யமாட்டேன். ஜனவரி மாதம் பாதி நான் வேலை செய்யமாட்டேன்'.

ஒரு சேலை பிசினஸ் பண்றதாக இருந்தால் எவ்வளவு முதலீட்டில் ஆரம்பிக்கலாம். எவ்வளவு மார்ஜின் வைக்கலாம்?இப்போது லாபம் கம்மியாகி ஆகிடுச்சுங்க. நிறைய பேர் வந்திட்டதால். இப்போது ஸ்க்ரோல் பண்ணினால் நிறைய பேஜ் பார்க்கலாம். மூன்று முதல் நான்கு லட்சம் இருந்தால் சேலை பிசினஸ் தொடங்கலாம்ங்க. மத்தபடி, ரூபாய்க்கு ஏத்தமாதிரி குவாலிட்டி இருக்கும். நாம் எவ்வளவு பண்றோமோ, அவ்வளவு லாபம் கிடைக்கும்.சீரியலில் நடிக்கிறதுக்கு ஆஃபர் எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டோம்?நிர்மலா மேம் இருந்தாங்க இல்லையா, விஜய் டிவியில். அவங்க இப்போது காலமாகிட்டாங்க. அவங்க எப்போது பார்த்தாலும் என்னை சீரியலுக்கு வா சீரியலுக்கு வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ஆக்டிங் பேஷன் இல்லை. வொர்க்கிற்காக அதைப் பண்ணிக்கிறேன். என் வொர்க்கில் நான் தனியாக இருந்தால்போதும். அவ்வளவு தான்.நன்றி: கலாட்டா தமிழ் யூடியூப் சேனல்

(6 / 6)

ஒரு சேலை பிசினஸ் பண்றதாக இருந்தால் எவ்வளவு முதலீட்டில் ஆரம்பிக்கலாம். எவ்வளவு மார்ஜின் வைக்கலாம்?

இப்போது லாபம் கம்மியாகி ஆகிடுச்சுங்க. நிறைய பேர் வந்திட்டதால். இப்போது ஸ்க்ரோல் பண்ணினால் நிறைய பேஜ் பார்க்கலாம். மூன்று முதல் நான்கு லட்சம் இருந்தால் சேலை பிசினஸ் தொடங்கலாம்ங்க. மத்தபடி, ரூபாய்க்கு ஏத்தமாதிரி குவாலிட்டி இருக்கும். நாம் எவ்வளவு பண்றோமோ, அவ்வளவு லாபம் கிடைக்கும்.

சீரியலில் நடிக்கிறதுக்கு ஆஃபர் எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டோம்?

நிர்மலா மேம் இருந்தாங்க இல்லையா, விஜய் டிவியில். அவங்க இப்போது காலமாகிட்டாங்க. அவங்க எப்போது பார்த்தாலும் என்னை சீரியலுக்கு வா சீரியலுக்கு வான்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ஆக்டிங் பேஷன் இல்லை. வொர்க்கிற்காக அதைப் பண்ணிக்கிறேன். என் வொர்க்கில் நான் தனியாக இருந்தால்போதும். அவ்வளவு தான்.

நன்றி: கலாட்டா தமிழ் யூடியூப் சேனல்

ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்