Lagna athi yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ லக்குகளை அள்ளித் தரும் லக்ன அதியோகம் யாருக்கு! கோடிகளை குவிக்கலாம்!
- Lagna athi yogam: ஒளியை பிரதிபலிப்பதில் சந்திரனுக்கு நிகராக லக்னமும் எப்போது செயல்படும். ஏனென்றால் சூரியனின் ஒளி குவிக்கும் இடம்தான் லக்னம் ஆகும். லக்ன அதி யோகமும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகமாக விளங்குகின்றது.
- Lagna athi yogam: ஒளியை பிரதிபலிப்பதில் சந்திரனுக்கு நிகராக லக்னமும் எப்போது செயல்படும். ஏனென்றால் சூரியனின் ஒளி குவிக்கும் இடம்தான் லக்னம் ஆகும். லக்ன அதி யோகமும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகமாக விளங்குகின்றது.
(1 / 7)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் சிறப்பு பலன்களை தரக்கூடிய யோகங்களில் ஒன்றாக லக்ன அதியோகம் விளங்குகின்றது.
(2 / 7)
ஒளியை பிரதிபலிப்பதில் சந்திரனுக்கு நிகராக லக்னமும் எப்போது செயல்படும். ஏனென்றால் சூரியனின் ஒளி குவிக்கும் இடம்தான் லக்னம் ஆகும். லக்ன அதி யோகமும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகமாக விளங்குகின்றது.
(4 / 7)
லக்னத்திற்கு 6, 7, 8ஆம் இடங்களில் லக்னம் தனது ஒளியை சிதறடிக்கும். இந்த லக்ன ஒளி சிதறும் இடத்தில் இயற்கை சுபர்கள் என்று சொல்லக்கூடிய குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் வரிசையாக அமர்ந்தாலோ, அல்லது மூவரும் கூடி 6, 7, 8ஆம் இடங்களில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்தாலோ, அல்லது இருவர் ஒரு ராசியிலும், ஒருவர் ஒரு ராசியிலும் பிரிந்து இருந்தாலோ, இவர்கள் வேறு தீய கோள்களின் தொடர்பு இல்லாத போது ஜாதகர் லக்ன அதி யோகத்தை அடைகிறார்.
(5 / 7)
இந்த யோகம் கிடைக்க லக்னத்தில் பாவ கிரகங்கள் என சொல்லப்படக் கூடிய சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருக்க கூடாது. மேலும் புதன், சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களுடன் சூரியன் சேர்ந்து இருக்க கூடாது.
(6 / 7)
இந்த யோகம் சந்திர அதி யோகத்தை அதிக பலன்களை தரக்கூடியதாக உள்ளது. சந்திர அதியோக விதிகளில் சந்திர பகவான் ஒளி பொறுந்தியவராக இருப்பது அவசியம். ஆனால் லக்ன அதியோகத்தில் லக்னம் பங்கப்படாமல் இருக்க வேண்டும். இதில் லக்னாதிபதி மறைவதோ, பாவியாக இருப்பதோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
மற்ற கேலரிக்கள்