Krodhi Tamil New Year: குரோதி தமிழ்ப் புத்தாண்டு: ராகு பகவானால் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்
- Rahu in Tamil New Year: வரும் ஏப்ரல் 14ஆம் தேதி குரோதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த காலத்தில் மீன ராசியில் ராகுபகவான் சஞ்சரித்து வருகின்றார். இதனால் ஏராளமான இழப்புகளை ஏற்படுத்துவார், ராகு பகவான்.
- Rahu in Tamil New Year: வரும் ஏப்ரல் 14ஆம் தேதி குரோதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த காலத்தில் மீன ராசியில் ராகுபகவான் சஞ்சரித்து வருகின்றார். இதனால் ஏராளமான இழப்புகளை ஏற்படுத்துவார், ராகு பகவான்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தில் உக்கிரமான கிரகமாகப் பார்க்கப்படும் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், தனது ராசியை மாற்றிக் கொள்கின்றன. கடந்த முறை 2003ஆம் ஆண்டு அக்டோபர் 30ல் ராகு ஒரு ராசியிலும், கேது இன்னொரு ராசியிலும் சஞ்சரித்தன. அந்த வகையில், 21ஆண்டுகளுக்குப் பின், தற்போது ராகு மற்றும் கேது இதேபோல் மாறி மாறி சஞ்சரிக்கிறது.தற்போது கன்னி ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானும், மீன ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவானும் இதேபோல் 2025ஆம் ஆண்டு வரை மாறி மாறி பயணிப்பார்கள். இதனால் சில ராசியினர் கடும் துயரங்களையும் துன்பங்களையும் சந்திக்கப் போகின்றனர்.
(2 / 6)
இந்நிலையில் ராகு மற்றும் கேதுவின் இருப்பிடம், குறிப்பாக மீன ராசியில் சஞ்சரிக்கும் ராகுவினால், புதிய தமிழ்ப்புத்தாண்டில் சில ராசியினருக்கு அசுப பலன்களை உண்டாக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே,இவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
(3 / 6)
சிம்ம ராசி: மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வருகின்றார். இதன் தாக்கம் தமிழ்ப்புத்தாண்டான சிம்மத்தில் எதிரொலிக்கிறது. இதனால் சிம்ம ராசியினர் பணியிடங்களில் மிகவும் எச்சரிக்கையுடனும் சூதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்களால் தான், கெடுபலன்கள் கிடைக்கும். எனவே, அவர்களுடன் வாயைத்திறக்கும்போது மிகவும் கண்ணியமாக மட்டும் பழகிக்கொள்ளுங்கள். வாக்குவாதம் நடக்கும் இடங்களில் இருந்து சற்று தள்ளி இருங்கள். கருத்துவேறுபாடு இருந்தாலும் அதை வெளிப்படுத்தாதீர்கள். அதை வெளிப்படுத்தினால் பிரச்னை மிகப்பெரிதாகி தீர்க்கமுடியாத லெவலுக்குச் சென்றுவிடும். நீங்கள் உழைப்பீர்கள், உங்கள் சகாக்கள் அந்தப் பெயரைச் சம்பாதித்துக்கொண்டு போவார்கள். அதனைப் பற்றி வருந்தாதீர்கள். வீட்டில் இருக்கும் இல்ல உறுப்பினர்களிடையே சண்டை சச்சரவுகள் வரலாம். எனவே, வாய்க்குப் பூட்டு போடாத குறையாக அமைதியுடன் இருக்கவேண்டும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் மன உளைச்சல் உண்டாகும். சுகவீனம் ஏற்படலாம். ஒவ்வொரு காரியங்களிலும் தடையைச் சந்திப்பீர்கள்.
(4 / 6)
கும்ப ராசி: மீன ராசியில் ராகு பகவான் சஞ்சரித்து வருகின்றார். இதன் தாக்கம் தமிழ்ப்புத்தாண்டான கும்பராசியிலும் எதிரொலிக்கிறது. இதனால் கும்ப ராசியினர் பணியிடங்களில் மிகவும் எச்சரிக்கையுடனும் சூதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும். மேலும், குடும்பத்தில் வீண் விரயச் செலவுகள் ஏற்படும். உங்களது உழைப்பு பல திசைகளில் செலவாகி வீணாகும். கையில் காசு நிற்காது. எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்கு பத்த மாட்டியுதே எனும் நிலைதான் இக்காலகட்டத்தில் இருக்கும். வாகனங்களால் விபத்து ஏற்பட்டு காயம் உண்டாகலாம். எனவே, இரவில் பயணம், தொலைதூரப்பயணத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் அடிக்கடி தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து மறையும். மன உளைச்சலால் அவதிப்படுவீர்கள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்காமல் தள்ளிப் போடலாம்.
(5 / 6)
மீன ராசி: ராகு மீனராசியில் தற்போது நிலைகொண்டுள்ளது. கேதுவின் நிலையும் மீன ராசிக்கு கெட்டதைத்தான் தரும். இந்த தாக்கம், தமிழ்ப்புத்தாண்டான மீன ராசியிலும் எதிரொலிக்கிறது. இந்த காலகட்டத்தில் மீன ராசியினர் காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். நீரிழப்பு நோய்களுக்கு ஆட்படலாம். எனவே, நீர் நிறைய குடியுங்கள். திடீரென சிலர் நம்மிடம் பேசி வம்பு இழுப்பார்கள். அதை சட்டை செய்யாமல் அவ்விடத்தைவிட்டு நகர்ந்துவிடுவது நல்லது. இந்த காலத்தில் வீண் சண்டைகள் உண்டாகி,அதனால் தேவையற்ற டென்ஷன் கூடும் என்பது விதி. எனவே, விதியை மதியால் வெல்ல முயற்சி செய்யுங்கள். நீங்கள் தொழிலில் நஷ்டம் அடையாமல் இருக்க ஒரே வழி, புதிய முதலீடுகளை செய்யாமல் இருப்பது தான். அப்படியில்லையென்றால் நஷ்டப்பட்டு பெரிய அடியைச் சந்திப்பீர்கள்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்