Rajini in Indian: ரஜினியின் மறுப்பு..! இந்தியன் படத்தில் நடிக்க கமல் கமிட்டானது எப்படி?
- 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் முதல் பாகம் பேன் இந்தியா அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் படம் பற்றி சில அறிந்திராத விஷயங்களை பார்க்கலாம்
- 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தியன் முதல் பாகம் பேன் இந்தியா அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கும் நிலையில் படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் படம் பற்றி சில அறிந்திராத விஷயங்களை பார்க்கலாம்
(1 / 10)
ஜூலை 12ஆம் தேதி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தியன் 2 வெளியாகிறது. பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணி அமைத்திருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த சேனாபதி கதாபாத்திரத்தில் கமல் தோன்றவுள்ளார்
(twitter)(2 / 10)
1996இல் வெளியான இந்தியன் முதல் பாகத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்த படத்தில் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதிலாக தான் கமல்ஹாசன் இந்தியன் படத்தில் நடிக்க கமிட்டானார்
(3 / 10)
ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்காத நிலையில், இந்தியன் கதையை கமிலடம் கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர். அவர் கதையை விவரித்த விதத்தில் பிடித்து போன கமல், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்
(4 / 10)
தனது வாழ்க்கையிலும், நண்பர்கள் வாழ்க்கையிலும் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் கதையை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தையும் அதே போல் சில உண்மை சம்பவங்களையும், கதையும் அடிப்படையாக வைத்து உருவாக்கியுள்ளாராம்
(5 / 10)
முதலில் கமலின் ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் மனிஷா கொய்ராலா ஒப்பந்தமானார்
(6 / 10)
இந்த படம் தொடங்குவதற்கு முன்னர் நடந்த மேக்கப் டெஸ்ட் ஷுட்டில் மீசை ஒட்ட கமல்ஹாசன் மறந்துவிட்டாராம். ஆனால் டெஸ்ட் ஷுட்டில் மேக்கப் இல்லாத அந்த லுக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக அமைய அதையை இறுதி செய்துள்ளனர்
(7 / 10)
இசைப்புயல் ஏ.ஆர்., ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் வெகுவாக பேசப்பட்டது. பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதமாக ரசிகர்களை கவர்ந்தது
(8 / 10)
இந்தியன் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் பயிற்சி பெற்ற காமண்டர் வேடத்தில் கமல் தோன்றியிருப்பார். இதில் நேதாஜியின் ரியல் விடியோவுடன், கமல் இணைந்து இருப்பது போல் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து இயக்குநர் ஷங்கர் உருவாக்கியிருப்பார். அப்போது இந்த காட்சிகள் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றன
(9 / 10)
முதலில் ரஜினிகாந்திடம் இந்த கதை கூறப்பட்ட நிலையில், அவர் வேறு படங்களில் கமிட்டானதால் நடிக்க முடியாமல் போயுள்ளது. கமலும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் போயிருந்தால், இயக்குநர் ஷங்கர் இந்த படத்தை தெலுங்கு நடிகர் வெங்கடேஷை வைத்து இயக்குவதாக திட்டமிட்டிருந்தார்
மற்ற கேலரிக்கள்