அதிகரிக்கும் ஒலி மாசுபாடு.. இயர் பட்டில் வைக்க வேண்டிய அதிக ஒலியளவு எவ்வளவு? காதுகள் பராமரிப்பு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அதிகரிக்கும் ஒலி மாசுபாடு.. இயர் பட்டில் வைக்க வேண்டிய அதிக ஒலியளவு எவ்வளவு? காதுகள் பராமரிப்பு

அதிகரிக்கும் ஒலி மாசுபாடு.. இயர் பட்டில் வைக்க வேண்டிய அதிக ஒலியளவு எவ்வளவு? காதுகள் பராமரிப்பு

Published Mar 04, 2025 05:47 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 04, 2025 05:47 PM IST

  • உங்கள் காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும் நீங்கள் பயன்படுத்தும் இயர்பட்களில் ஒலி அளவை சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். காதுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது பற்றி செவிப்புலன் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் என்விகே மோகன் அளிக்கும் ஆலோசனைகளை பார்க்கலாம்

ஒலி மாசுபாடு காரணமாக கேட்கும் திறன் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்களின் சத்தம் முதல், பல்வேறு இசை நிகழ்ச்சிகள், ஒலி அமைப்புகள் சத்தம் என செவித்திறனின் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் அதிகரித்துள்ளது

(1 / 7)

அதிக டெசிபல் சத்தம் காதுகளுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என கொல்கத்தாவில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர், செவித்திறன் மருத்துவர் டாக்டர் என்விகே மோகன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

(2 / 7)

டாக்டர் என்விகே மோகனின் கூற்றுப்படி, ‘70 டெசிபலுக்கு மேல் உள்ள சத்தங்களை நீண்ட நேரம் கேட்பது உங்கள் செவிப்புலனை நிரந்தரமாக அழிக்கக்கூடும். மறுபுறம், திடீரென்று 100 டெசிபல் சத்தத்தைக் கேட்டால் அந்த நபர் திடீரென காது கேளாதவராக மாறலாம்

(3 / 7)

சமீப காலங்களில் நகர்ப்புறங்களில் வாகனங்கள் சத்தம் 80-100 டெசிபல்களுக்கு இடையில் உள்ளது. கூடுதலாக, இசை நிகழ்ச்சிகள் அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளின் ஒலி அளவு 120 டெசிபல்களை தாண்டுகிறது. இதன் விளைவாக, சந்தேகத்துக்கு இடமின்றி மனிதனின் கேட்கும் திறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது

(4 / 7)

ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பாட்கள் போன்ற சாதனங்கள் சாதனத்தின் ஒலியை நேரடியாக காதுகுழலுக்கு வழங்குகின்றன. இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர் கூறுகிறார். ஹெட்ஃபோன்கள் அல்லது இயர்போன்களில் ஏதாவது ஒன்றைக் கேட்க விரும்பினால், ஒலியளவை 60 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்பது அவரது ஆலோசனையாக உள்ளது

(5 / 7)

சாதனத்தின் அதிகபட்ச ஒலியளவின் அடிப்படையில், இந்த குறைந்த ஒலி வரம்பை அமைக்க வேண்டும். உங்கள் செவித்திறனை ஆரோக்கியமாக வைத்திருக்க, இதற்கு ஒலி அளவுக்கு மேல் எதையும் கேட்காமல் இருப்பது நல்லது

(6 / 7)

குறிப்பு: மருத்துவருடன் கருத்தின் அடிப்படையில் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. உடல் நலம் சார்ந்த ஒவ்வொரு பிரச்னைக்கும் சிகிச்சை மற்றும் குணப்படுத்தும் முறை ஒவ்வொரு நபருக்கும் வேறுபட்டதாக இருக்கும். எனவே, ஆலோசனைகளை மட்டும் நம்ப இருக்காமல், எந்தவொரு பிரச்னைக்கும் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை நேரில் பெறுங்கள்

(7 / 7)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்