Dairy Free Food Diet: எடை குறைப்பு, சரும பொலிவு..! பால் சார்ந்த பொருள்களை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள் இவைதான்
- பால் சார்ந்த பொருள்கள் இல்லாத டயட்டை பின்பற்றினால் உடல் எடை இழப்பு, சரும் பொலிவு என பல்வேறு நன்மைகளை பெறலாம்.
- பால் சார்ந்த பொருள்கள் இல்லாத டயட்டை பின்பற்றினால் உடல் எடை இழப்பு, சரும் பொலிவு என பல்வேறு நன்மைகளை பெறலாம்.
(1 / 6)
லேக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது பால் சார்ந்த பொருள்களால் அலர்ஜி இருப்பவர்கள் பால் இல்லாத டயட்டை பின்பற்றுகிறார்கள். இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்
(2 / 6)
பாலில் மற்றும் அவை சார்ந்த பொருள்களில் இருக்கும் ஹார்மோன்கள் காரணமாக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் முகப்பரு கூட ஏற்படுகிறது. எனவே இவற்றை தவிர்ப்பதால் சரும அழகையும், பொலிவையும் தக்க வைக்கலாம்
(3 / 6)
செரிமானம் சார்ந்த பிரச்னைகள் வயிறு உப்புசம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை சார்பாக ஏற்படுகிறது. எனவே இவற்றை தவிர்க்க விரும்புகிறவர்கள் பால் சார்ந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்
(4 / 6)
அதிக நிறைவுற்ற கொழுப்புகள், கலோரிகள் நிறைந்ததாக பால் சார்ந்த கொழுப்புகள் இருக்கின்றன. இதை தவிர்ப்பதன் மூலம் எடை குறைப்பும் சாத்தியமாகிறது. உடல் எடையை நிர்வகிக்க பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் பலன் பெறலாம்
(5 / 6)
பால் சார்ந்த உணவில் இருக்கும் ஒரு வித புரதத்தால் சிலருக்கு வீக்கமும், அழற்சிகளும் ஏற்படுகிறது. எனவே உடலில் இருக்கும் அழற்சிகளை குறைக்க உதவுகிறது
மற்ற கேலரிக்கள்