HBD Rahul Dravid: இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய பெருஞ்சுவர் ராகுல் டிராவிட் பற்றி அதிகம் அறியாத விஷயங்கள் இதோ!
- டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், சிறந்த பீல்டர், விக்கெட் கீப்பர், தலைமை பயிற்சியாளர் என இந்திய அணிக்காக விளையாடிய போதும், ஓய்வுக்கு பின்னரும் பங்களிப்பு அளித்து வரும் டிராவிட், இந்திய பெருஞ்சுவராக மட்டுமில்லாமல் Mr. Dependable எனவும் ரசிகர்கள் அழைப்பதற்கு பொருத்தமானராக உள்ளார்
- டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், சிறந்த பீல்டர், விக்கெட் கீப்பர், தலைமை பயிற்சியாளர் என இந்திய அணிக்காக விளையாடிய போதும், ஓய்வுக்கு பின்னரும் பங்களிப்பு அளித்து வரும் டிராவிட், இந்திய பெருஞ்சுவராக மட்டுமில்லாமல் Mr. Dependable எனவும் ரசிகர்கள் அழைப்பதற்கு பொருத்தமானராக உள்ளார்
(1 / 7)
டெஸ்ட் போட்டிகளில் 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் ராகுல் டிராவிட். இதில் 8 முறை அந்நிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வென்றுள்ளார்
(2 / 7)
தொடர்ச்சியாக நான்கு இன்னிங்ஸில் சதமடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனை டிராவிட் வசம் உள்ளது. அத்துடன் டெஸ்ட் போட்டி விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எதிராக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார்
(3 / 7)
மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கும் டிராவிட், தனது கேரியரில் 31, 258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இது ஓவர் கணக்கில் வைத்து பார்த்தால் 5,209. 4 ஆகும். வேறு எந்த பேட்ஸ்மேனும் இதுவரை 30 ஆயிரம் பந்துகளை கூட எதிர்கொண்டதில்லை
(4 / 7)
ராகுல் டிராவிட்டின் ஜெர்சி எண் 19 ஆகும். அவரது மனைவியின் பிறந்தநாள் 19ஆம் தேதி. ஜெர்சி எண் 19ஐ செய்ததற்கு, மனைவியின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி என்று கூறியுள்ளார்
(5 / 7)
ராகுல் டிராவிட்டை பற்றி இரண்டு சுயசரிதை புத்தகங்கள் உள்ளன. எழுத்தாளர் ஜெய்சங்கர் எழுதிய “Rahul Dravid A Biography”, தேவேந்திர பிரபுதேசாய் எழுதிய “The Nice Guy Who Finished First” புத்தகங்கள் ஆகும்
(6 / 7)
இந்தியாவை தவிர ஸ்காட்லாந்து தேசிய அணிக்காகவும் விளையாடிய வீரராக டிராவிட் உள்ளார். ஸ்காட்லாந்து அணிக்காக 12 போட்டிகளில் 600 ரன்கள், 66.66 சராசரியுடன் அடித்துள்ளார்(Cricket Scotland)
மற்ற கேலரிக்கள்