தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Know About Ravindra Jadeja And Rivaba Solanki Love Story

Ravindra Jadeja Love Story: ஜடேஜா - ரிவாபா தம்பதியினரின் காதல் கதை இது!

Jun 01, 2023 01:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jun 01, 2023 01:34 PM , IST

  • ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் ஆகியுள்ள சிஎஸ்கே அணியின் ஹீரோவான ஜடேஜா பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அவருடன் மனைவி ரிவாபா, மகள் நித்யானாவும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளனர். ஜடேஜா - ரிவபா தம்பதியினரின் காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஐபிஎல் 2023 தொடரை கடைசி இரண்டு பந்தில் சிக்ஸர், பவுண்டரி விளாசி சிஎஸ்கே அணிக்கு 5வது முறையாக ஐபிஎல் கோப்பை பெற காரணமாக இருந்தார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. அவரது ஆட்டத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.

(1 / 10)

ஐபிஎல் 2023 தொடரை கடைசி இரண்டு பந்தில் சிக்ஸர், பவுண்டரி விளாசி சிஎஸ்கே அணிக்கு 5வது முறையாக ஐபிஎல் கோப்பை பெற காரணமாக இருந்தார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. அவரது ஆட்டத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது.(CSK Twitter)

ஐபிஎல் கோப்பையை மனைவியிடம் கொடுத்து, அணி கேப்டன் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக சேலை அணிந்து மிகவும் சிம்பளாக வந்த ஜடேஜாவின் மனைவி ரிவபா அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

(2 / 10)

ஜடேஜா - ரிவபா தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. குஜராத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த ரவிந்திர ஜடேஜா, இந்திய கிரிக்கெட் வீரராக பிரபலமானார். பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணான ரிவபா, எஞ்ஜினியரிங் முடித்து தற்போது அரசியல்வாதியாக உள்ளார்

(3 / 10)

ஜடேஜாவின் தந்தை தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்துள்ளார். இவர் ஜடேஜா ராணுவ வீரராக ஆக வேண்டும் என விரும்பினார். ஆனால் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்

(4 / 10)

ஜடேஜாவின் தாயார் லதாவின் உதவியுடன் தந்தைக்கு தெரியாமலே கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதும், விளையாடுவதுமாக இருந்துள்ளார். ஜடேஜாவுக்கு 15 வயது ஆனபோது தாயார் லதா சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பின்னர் மூத்த அக்கா நைனா ஜடேஜாவுக்கு தாய் போன்ற செயல்பட்டு அவரை கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்தினார்

(5 / 10)

கிரிக்கெட் விளையாட்டில் கடின உழைப்பை வெளிப்படுத்திய ஜடேஜா 2008ஆம் யு19 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தார். இதில் சிறப்பான ஆட்டத்திறன் மூலம் கவனத்தை ஈரத்தி ஜடேஜா, அதே ஆண்டில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்தார்

(6 / 10)

தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஜடேஜாவின் சகோதரி நைனா மூலம் ரிவாபிவின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. ரிவாபா பிரபல தொழிலதிபரான அகர்பா ஸ்ரீமந்தின் மகள்

(7 / 10)

ரிவாபிடம் நட்பாக பழகி வந்தார் ஜடேஜா. பின்னர் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துபோக டேட்டிங்கில் ஈடுபட்டனர். வீட்டில் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை வந்தபோது ரிவாபாவை காதலிப்பதாக தெரிவித்தார் ஜடேஜா. பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜடேஜா - ரிவாபாவுக்கு பிப்ரவரி 2016இல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

(8 / 10)

2016 ஏப்ரல் 17ஆம் தேதி ஜடேஜா - ரிவாபா திருமணம் செய்து கொண்டனர். மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. ஜடேஜாவுக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள உயர் ரக Audi Q7 காரை அவரது மாமனார் திருமணத்துக்கு முன்னர் பரிசாக வழங்கினார்.  ஜடேஜா - ரிவாபா தம்பதியினருக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது

(9 / 10)

ஜடேஜாவின் மாமனார் ஹர்தேவ் 2 தனியார் பள்ளிகளும், நட்சத்திர ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார். ஜடேஜா மனைவி ரிவாபா 2019ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். எஞ்சினியரான அவர், மகளிர் அமைப்பு தலைவியாகவும் உள்ளார். தற்போது வடக்கு ஜாம்நகர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்

(10 / 10)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்