KKR wins IPL: 10 ஆண்டுகள் காத்திருப்பு! கம்மின்ஸை சைலண்ட் ஆக்கிய ஷ்ரேயாஸ் பாய்ஸ் - சேப்பாக்கத்தில் ரெண்டாவது லட்டு
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
(1 / 5)
ஐபிஎல் தொடரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது. தொடர் முழுக்க கன்சிஸ்டன்ட் ஆன ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் பாய்ஸ், கம்மின்ஸை சைலண்ட் ஆக்கியுள்ளனர்
(PTI)(2 / 5)
கடந்த 2012 சீசனில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். சென்னை சேப்பாக்கத்தில் வைத்துதான் இந்த போட்டி நடைபெற்றது. இதன் பின்னர் 2014 சீசனில் இரண்டாவது முறை சாம்பியன் ஆனது. இந்த போட்டி பெங்களுருவில் நடந்தது. இதன் பின்னர் தற்போது மூன்றாவது கோப்பையை சென்னை சேப்பாக்கத்தில் வைத்து மீண்டும் வென்றுள்ளது
(PTI)(3 / 5)
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இந்த சீசனில் 16 போட்டிகள் விளையாடி 3 தோல்விகளை மட்டும் பெற்றுள்ளது
(ANI)(4 / 5)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் 488 ரன்கள், 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் மிகவும் மதிப்புமிக்க வீரராக உருவெடுத்துள்ளார்
(AFP)மற்ற கேலரிக்கள்