Kethu Rahu Bhagavan Luck: 8ம் இடத்தில் ராகு கேது..எப்படி இருந்தால் ஆப்பு உறுதி? - ஜோதிடர் பேட்டி!
ஒரு மனிதனுக்கு எட்டாம் இடம் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். ஆயுள், அசிங்கம், கண்டம், விபத்து நோய், உயரத்திலிருந்து கீழே விழுதல், திடீர் அதிர்ஷ்டம், தன வரவு என இப்படி நல்லதும் கெட்டதுமாக கலந்திருப்பது தான் எட்டாமிடம். அதில் கெட்டது என்பது கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
(2 / 8)
எட்டாம் இடத்தில் ராகு, கேது இருந்தால் என்ன நடக்கும் என்பதை பிரபல ஜோதிடர் ஸ்ரீ ராம்ஜி தன்னுடைய யூடியூப் சேனலில் அண்மையில் பேசினார்.
அவர் பேசும் போது, “ ஒரு மனிதனுக்கு எட்டாம் இடம் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். ஆயுள், அசிங்கம், கண்டம், விபத்து நோய், உயரத்திலிருந்து கீழே விழுதல், திடீர் அதிர்ஷ்டம், தன வரவு, வெளிநாட்டில் வசிப்பது, நீண்ட தூர பிரயாணம், தலைமறைவு வாழ்க்கை, உடல் உறுப்புகள் துண்டிக்கப்படுவது என இப்படி நல்லதும் கெட்டதுமாக கலந்திருப்பது தான் எட்டாமிடம். அதில் கெட்டது என்பது கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
(3 / 8)
எட்டாம் இடத்தில் ராகு கேது இருந்தாலே கொலை நடுங்கும். காரணம் என்னவென்றால் இந்த இரண்டு மற்றும் எட்டு ஆகிய ஸ்தானங்கள் வந்துவிடும். எப்போதுமே ராகுவிற்கு நேர் ஏழாம் இடத்தில் இருக்கக்கூடியவர் கேது என்பதால், ராகு எட்டாம் இடத்தில் இருந்தால், கேது குடும்ப ஸ்தானம் இரண்டாம் இடத்தில் இருப்பார். கேது எட்டாமிடத்தில் இருந்தால், ராகு குடும்பஸ்தானமாக இரண்டாம் இடத்தில் இருப்பார். இது இரண்டும் நல்ல விஷயங்கள் அல்ல.
(4 / 8)
இவர்கள் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது, இவர்களின் திசைகள் வராமல் இருந்தால் சிறப்பு. ஒருவேளை திசை வந்தால் கெடுதியான பலன்கள் வருவது நிச்சயம். ஆனால் நூற்றுக்கு 25 சதவீத ஜாதகங்கள் எந்தவித கெடுதியான பலன்களை பெறாமல் சென்றிருக்கின்றன.
(5 / 8)
இவர்கள் அமரும் வீடானது இயற்கை சுபராக இருந்து விட்டால் அதுவே நமக்கு பாதி விமோசனம் தான். எட்டாம் இடத்தில் ராகுவும் கேதுவும் இருந்தால், முழுக்க முழுக்க கெடுதியான பலன்களே கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் அந்த இடமானது பயப்பட வேண்டிய இடம்தான்.
(6 / 8)
அந்த இடத்தில் சில நன்மைகள் ஒளிந்து இருந்தாலும் கூட, அதனுடன் சில அசிங்கம், சில தவறுகள், கண்டங்கள், பிணி, பீடை எனக்கு ஏதாவது ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு இவை 50 க்கு 50 என்ற ரீதியில் செயல்படும் பொழுது ஓகே என்ற எடுத்துக் கொள்ளலாம்.
(7 / 8)
ஆனால் 90க்கு 10 சதவீதம் மட்டுமே நன்மைகள் நிகழ்ந்தால் நிச்சயம் கஷ்டப்படும். இந்த வித்தியாசம் என்பது வீடு கொடுத்தவனின் வலு, இணைந்த கிரகங்களின் தன்மை, வீடு கொடுத்தவன் வக்ரம் பெறுவதால் ஏற்படும் தன்மை, இயற்கை சுபர்களின் இணைவு என பல நிலைகளில் மாறக்கூடியதாகும்
(8 / 8)
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்