’எம்புரானுக்கு தடை எல்லாம் போட முடியாதுங்க’:வழக்கை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்.. மனுசெய்த பாஜககாரர் சஸ்பெண்ட்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ’எம்புரானுக்கு தடை எல்லாம் போட முடியாதுங்க’:வழக்கை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்.. மனுசெய்த பாஜககாரர் சஸ்பெண்ட்

’எம்புரானுக்கு தடை எல்லாம் போட முடியாதுங்க’:வழக்கை தள்ளுபடி செய்த கேரள உயர் நீதிமன்றம்.. மனுசெய்த பாஜககாரர் சஸ்பெண்ட்

Published Apr 02, 2025 10:26 AM IST Marimuthu M
Published Apr 02, 2025 10:26 AM IST

  • எம்புரான் திரைப்படத்தில் 2002 குஜராத் கலவரத்தைக் குறிப்பிடும் காட்ட்சிகள் இருப்பதாகவும் மத்திய அரசின் நேர்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வலதுசாரி அரசியலை விமர்சித்ததாகக் கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மலையாளப் படமான எம்புரான் திரையிடலுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் என்பவர், ‘எம்புரான்’ திரையிடலுக்கு தடை விதிக்க தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி சி.எஸ். டயஸ் அமர்வு மறுத்துவிட்டது.

(1 / 6)

வலதுசாரி அரசியலை விமர்சித்ததாகக் கூறப்படும் சர்ச்சையில் சிக்கியுள்ள மலையாளப் படமான எம்புரான் திரையிடலுக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் என்பவர், ‘எம்புரான்’ திரையிடலுக்கு தடை விதிக்க தாக்கல் செய்த மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி சி.எஸ். டயஸ் அமர்வு மறுத்துவிட்டது.

திரையரங்குகளில் ’எம்புரான்’ படத்தைத் திரையிடுவதைத் தடை செய்ய உத்தரவிடக் கோரி, அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். படத்தில் 2002ல் குஜராத் கலவரங்களைக் குறிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், மத்திய அரசின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) இந்தப் படம் சான்றிதழ் பெற்றவிட்ட நிலையில், நீதிமன்றம் விஜீஷ் வெட்டத்தின் நேர்மையான நம்பிக்கையை சந்தேகிப்பதாக நீதிபதி டயஸ் கூறினார்.

(2 / 6)

இது தொடர்பாக பேசிய நீதிபதி டயஸ், "இந்த எம்புரான் படத்தைப் பார்த்தீங்களா? உங்கள் ஆட்சேபனை என்ன? இது சென்சார் போர்டு சான்றளித்தது இல்லையா? உங்கள் நேர்மையான நம்பிக்கையை நான் சந்தேகிக்கிறேன். இந்தப் படம் வன்முறையைத் தூண்டுவதாக ஒரு புகாரைக் காட்டுங்க. காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரைக் காட்டுங்க. இவை எல்லாம் விளம்பரம் சார்ந்த மனுக்கள், வேறொன்றுமில்லை" என்று நீதிபதி கூறினார். மனுதாரரின் இடைக்கால நிவாரண மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்க பரிந்துரைத்தார்.

(3 / 6)

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் கேரள உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகு, கட்சி அவரை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ததாக அறிவித்தது."பாஜகவின் திருச்சூர் மாவட்ட முன்னாள் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்," என்று கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திருச்சூர் நகரப் பிரிவின் தலைவர் ஜஸ்டின் ஜேக்கப் கூறுகையில்,"உயர் நீதிமன்றத்தில் விஜீஷ் தாக்கல் செய்த மனுவுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. படம் குறித்த எங்கள் நிலைப்பாட்டை கட்சியின் மாநிலத் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளார்," என்று கூறினார்.

(4 / 6)

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் கேரள உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகு, கட்சி அவரை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்ததாக அறிவித்தது.

"பாஜகவின் திருச்சூர் மாவட்ட முன்னாள் குழு உறுப்பினர் விஜீஷ் வெட்டம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்," என்று கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருச்சூர் நகரப் பிரிவின் தலைவர் ஜஸ்டின் ஜேக்கப் கூறுகையில்,"உயர் நீதிமன்றத்தில் விஜீஷ் தாக்கல் செய்த மனுவுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. படம் குறித்த எங்கள் நிலைப்பாட்டை கட்சியின் மாநிலத் தலைவர் தெளிவாகக் கூறியுள்ளார்," என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த விஜீஷ் வெட்டம், கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்வதாகவும், நீதிமன்றத்தை அணுகும் நடவடிக்கை தனிப்பட்டது என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், படத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தொடரப்போவதாகவும் கூறினார்.

(5 / 6)

"லூசிஃபர்" திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படம், வலதுசாரி அரசியலை விமர்சிக்கவும், குஜராத் கலவரங்கள் பற்றிய மறைமுக குறிப்புகளை காட்சியாகவும் வைத்திருந்தது. கடந்த மார்ச் 27அன்று படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் கதைக்கரு குறித்து கேரளாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்தது. நடிகர் மோகன்லால் தனது எம்புரான் திரைப்படத்தைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சைக்கு மார்ச் 30ஆம் தேதி வருத்தம் தெரிவித்தார். ஏனெனில், எம்புரான் திரைப்படம் வலதுசாரி அரசியலை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள் மனித உணர்வுகளில் துயரத்தை ஏற்படுத்திய காட்சிகளை நீக்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

(6 / 6)

ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்