Keerthy Suresh: கீர்த்தி இஸ் பேக்.. கையில் துப்பாக்கி, கழுத்தில் புலிப்பல்.. பெண் தாதாவாக மிரட்டும் அக்கா டீஸர்
- Keerthy Suresh in Akka: அக்கா என்ற பெயரில் பாலிவுட் வெப் சீரிஸில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதன் டீஸர் வெளியீடு நிகழ்வில் வெள்ளை நிற புடவை அணிந்து பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அழகில் வருகை புரிந்தார். பாலிவுட் வெப் சீரஸான இதில் ராதிகா ஆப்தேவுடன் இணைந்து நடித்துள்ளார்

(1 / 5)
கடந்த டிசம்பரில் காதலன் ஆந்தோணியை கரம் பிடித்து மண வாழ்க்கையில் நுழைந்தார் கீர்த்தி சுரேஷ். திருமணத்துக்கு பின் கீர்த்தியின் பாலிவுட் என்ட்ரியாக அமைந்த பேபி ஜான் படம் வெளியானது. தமிழ் தெறி ரீமேக்கான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. இருப்பினும் கீர்த்திக்கு பாலிவுட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்த நிலையில் தற்போது பாலிவுட் ஓடிடி வெப்சீரிஸில் களமிறங்குகிறார்
(Twitter)(2 / 5)
ராதிகா ஆப்தேவுடன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் அக்கா வெப்சீரிஸ் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதில கையில் துப்பாக்கி, கழுத்தில் புலிப்பல் என பெண் தாதாவாக கீர்த்தியின் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது
(All Pics @Instagram/Keerthy Suresh)(3 / 5)
அக்கா டீஸர் வெளியீட்டு நிகழ்வுக்கு வருகை புரிந்திருந்த கீர்த்தி சுரேஷ், சேலை, ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் உடன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக இருந்தார். நிகழ்ச்சிக்கு வந்த போட்டோகிராபர்கள் கீர்த்தி சுரேஷை பல்வேறு கோணங்களில் கிளிக்கி தள்ளியுள்ளனர்
(4 / 5)
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த அக்கா வெப் சீரிஸை தர்மராஜ் ஷெட்டி இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த சீரிஸ் வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை
மற்ற கேலரிக்கள்