Kayal Anandhi: வலையில் விழுந்த ஆனந்தி; உறவினர் உடைத்த உண்மை! - கயல் காதல் கதை!
கிட்டத்தட்ட ஒரு வருடம் நண்பர்களாக பழகினோம். நாங்கள் பணியாற்றிய படத்தின் இயக்குநர் அவரின் உறவினர்தான். அவர் எங்களை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவரது குடும்பத்தில் அவர் பேசி இருக்கிறார்.
(1 / 5)
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய கயல் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் அறிமுகம் ஆனவர் கயல் ஆனந்தி. தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் உதவி இயக்குநரான சாக்ரடீஸை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இவர் தன்னுடைய காதல் கதையை கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
(2 / 5)
அவர் பேசும் போது, “முதன்முறையாக அவரை பார்க்கும் போதே, இவர்தான் நம்முடைய வாழ்க்கைத் துணை என்று ஸ்பார்க் அடித்து விட்டது. அவரை பார்க்கும் போது எனக்கு கிடைத்த ஃபீல் வேறு யாரிடமும் வரவில்லை
கிட்டத்தட்ட ஒரு வருடம் நண்பர்களாக பழகினோம். நாங்கள் பணியாற்றிய படத்தின் இயக்குநர் அவரின் உறவினர்தான். அவர் எங்களை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவரது குடும்பத்தில் அவர் பேசி இருக்கிறார்.
(3 / 5)
இதற்கிடையே இவரும் என்னிடம் எப்போது கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறீர்கள். உங்களுடைய ஐடியா என்ன என்றெல்லாம் கேட்டார்.
(4 / 5)
என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் என்னுடைய அப்பா இருப்பார். அப்போது அவர் இவரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். இவருடைய குணம், நடந்து கொள்ளும் விதம் என எல்லாமும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்துதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
.
மற்ற கேலரிக்கள்