Karthigai Month: கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கு ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்
- கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
- கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
(1 / 6)
கார்த்திகை மாதத்தில் தினமும் விளக்கு ஏற்றினால் ஐஸ்வர்யம் பெருகுமாம். அத்துடன், பிரிந்திருக்கும் கணவன்-மனைவி ஒன்று சேர சிவன்-பார்வதிக்கு விரதம் இருந்து வழிபட்டால் போதுமாம். அதுகுறித்த விவரங்களையும் விரிவாகப் பார்ப்போம்.
(2 / 6)
கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு சிறப்புகள் இருக்கிறது. இம்மாதம் தான் மழை பொழிவு அதிகம் இருக்கும் மாதம் ஆகும்.
(3 / 6)
கார்த்திகை 1ம் தேதி மிக விஷேஷமான நாள். அந்நாளில் தான் சபரிமலை சுவாமி ஐயப்பனுக்குக் கூட மாலை அணிந்து விரத்ததை தொடங்குவார்கள்.
(4 / 6)
கார்த்திகை மாதம் முழுவதுமே நாம் விளக்கேற்றி வழிபட வேண்டும். அகநாநூறு, புறநானூறு என எந்த இலக்கிய நூல்களை எடுத்துப் பார்த்தாலும் இந்த மாத்திற்கு விளக்கிடு மாதம் என பெயர் கொடுத்திருப்பார்களாம்.
(5 / 6)
வீட்டு வாசலில் தினமும் இரண்டு விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் கார்த்திகை மாதங்களில் விரதங்கள், விஷேஷ நாட்களும் இருக்கின்றன.
(6 / 6)
கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிக மிக விஷேஷமானது. இல்லறத்தில் மிகவும் பிரச்சனை இருந்தால், பிரிந்திருக்கும் கணவன்-மனைவி ஒன்று சேர வேண்டும் என்றால் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிவபெருமானையும் பார்வதியையும் நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயமாக பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேருவார்கள்.
மற்ற கேலரிக்கள்






