Kannika Snehan: ‘கார்த்திகை தினத்தில் தாலிக்கயிறுடன் காத்திருப்பு.. குங்குமம் வைத்த கடைக்காரி.. - சினேகன் காதல் கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kannika Snehan: ‘கார்த்திகை தினத்தில் தாலிக்கயிறுடன் காத்திருப்பு.. குங்குமம் வைத்த கடைக்காரி.. - சினேகன் காதல் கதை!

Kannika Snehan: ‘கார்த்திகை தினத்தில் தாலிக்கயிறுடன் காத்திருப்பு.. குங்குமம் வைத்த கடைக்காரி.. - சினேகன் காதல் கதை!

Feb 25, 2024 10:40 AM IST Kalyani Pandiyan S
Feb 25, 2024 10:40 AM , IST

நானோ யாராக இருந்தால் நமக்கென்ன ஆடிஷன் செய்யப்போகிறார்கள். வாய்ப்பு இருந்தால் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைத்து சென்றேன்.

தொகுப்பாளரும், நடிகையுமான கன்னிகா ரவி பாடலாசிரியர் சினேகன் உடன் காதல் ஏற்பட்ட கதையை அவள் கிளிட்ஸ் சேனலுக்கு கடந்த 2 வருடங்களுக்கு பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டி இங்கே!அதில் அவர் பேசும் போது, “ஒரு நாள் ஒரு திரைப்படத்தின் ஆடிஷனுக்காக நான் சென்றிருந்தேன். அங்கு, எனக்கு தங்கை கதாபாத்திரம் என்று சொன்னதோடு, என்னை ஆடிஷன் செய்வதற்காக சினேகன் என்பவர் வருவார் என்று சொன்னார்கள்.   

(1 / 6)

நானோ யாராக இருந்தால் நமக்கென்ன ஆடிஷன் செய்யப்போகிறார்கள். வாய்ப்பு இருந்தால் கொடுக்கப்போகிறார்கள் என்று நினைத்து சென்றேன். அப்போதுதான் சினேகன் என்பவர் இந்த பாடல்களை எல்லாம் எழுதி இருக்கிறார் என்று சொல்லி என் கையில் ஒரு லிஸ்ட்டை கொடுத்தார்கள்.   

(2 / 6)

அந்த லிஸ்டில் உள்ள பாடல்கள் அனைத்துமே நான் சிறுவயதில் அடிக்கடி கேட்டு கடந்து வந்த பாடல்கள். அது தெரிந்த பின்னர் அவரை சந்திக்கும் முன்னர் இதயம் படப்படத்தது. அதை மறைத்துக்கொண்டு அவரின் தங்கையாகவும் நடித்தேன். எல்லாம் முடிந்து வெளியே வந்த பின்னர், அவர் எனக்கு நல்ல சந்திப்பு கனி என்று ஒரு மெசேஜ் அனுப்பினார்.   

(3 / 6)

அதற்கு நான் ஒரு ஸ்மைலி அனுப்பினேன்.அதன் பின்னர்தான் முதன்முறையாக நாங்கள் பழக ஆரம்பித்தோம். பழகிய கொஞ்ச நாட்களிலேயே அவர் என்னிடம் காதலை சொல்லிவிட்டார். நான் அதற்கு அப்போது பதில் எதுவுமே சொல்லவில்லை.   

(4 / 6)

காரணம், என்னுடைய வீட்டில் சொன்னால் உடனே ஒத்துக் கொள்வார்கள். என் வீட்டை நான் அவ்வாறு கவனித்து கொண்டு இருந்தேன். நான் சரியான முடிவுதான் எடுப்பேன் என்று அவர்களுக்கு தெரியும்.   

(5 / 6)

எனக்கு விருப்பம் இருந்த போதும், நான் உடனடியாக சொல்லாமல் கொஞ்ச காலம் எடுத்துக் கொண்டேன். ஒரு கார்த்திகை அன்று கடையில் மஞ்சள் கிழங்கு தாலிக்கயிறு உள்ளிட்டவற்றை  வாங்கினேன்.  அதை பார்த்த அந்த கடைக்காரப் பெண் அதில் கொஞ்சம் குங்குமம் வைத்துக்கொடுத்தார். அன்றைய தினம்தான் விளக்குகள் மத்தியில் அவரிடம் நான் காதலை சொன்னேன். அவர் கொஞ்சம் நேரம் அப்படியே ஷாக் ஆகி நின்றார். பின்னாளில் அந்த தாலியை யாரோ திருடி விட்டார்கள்.” என்று பேசினார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்