Story of Song : என்ன கவிஞரே.. வரி கிடைக்காமல் திணறிய கண்ணதாசனை கிண்டல் செய்த கேவிஎம்.. ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Story Of Song : என்ன கவிஞரே.. வரி கிடைக்காமல் திணறிய கண்ணதாசனை கிண்டல் செய்த கேவிஎம்.. ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை!

Story of Song : என்ன கவிஞரே.. வரி கிடைக்காமல் திணறிய கண்ணதாசனை கிண்டல் செய்த கேவிஎம்.. ஒரு நாள் போதுமா பாடல் உருவான கதை!

Published Jul 05, 2024 08:28 AM IST Divya Sekar
Published Jul 05, 2024 08:28 AM IST

  • கே.வி மகாதேவன் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார். குறிப்பாக ஒரு நாள் போதுமா பாடல் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்படியான இந்தப் பாடல் உருவான சுவாரஸ்யமான கதை குறித்து இதில் காண்போம்.

சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் திருவிளையாடல். ஏ. பி. நாகராஜன் திருவிளையாடல் என்ற முழு நீள பக்திப்படத்தை 1965 ம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதியன்று வெளியிட்டார். சைவ சமய பக்தி இலக்கியமான திருவிளையாடல் இலக்கியத்திலிருந்து நான்கு பகுதிகளை மட்டும் எடுத்து படமாக இயக்கினார் நாகராஜன். 

(1 / 6)

சிவாஜி கணேசனும், சாவித்ரி கடவுள்களான பரமசிவன் -பார்வதியை கண் முன் காட்டியிருப்பார்கள். அதேபோல நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார். சிவாஜியும் நாகேஷ் இருவரும் பேசி நடிக்கும் காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய காட்சியாக பார்க்கப்படுகிறது.

(2 / 6)

கே.வி மகாதேவன் இசையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. இந்தப் பாடல்கள் அனைத்தையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார். குறிப்பாக ஒரு நாள் போதுமா பாடல் இன்றும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அப்படியான இந்தப் பாடல் உருவான சுவாரஸ்யமான கதை குறித்து இதில் காண்போம்.

(3 / 6)

இந்த பாடலை முதலில் பாட வைக்க அணுகியது சீர்காழியை தான். ஆனால் இந்தப் பாடலில் தோற்றுப் போவது போன்ற காட்சி அமைக்கப்பட்டதால் தோற்றுப் போகும் பாடலை நான் பாட மாட்டேன் என சீர்காழி சொல்லிவிட்டாராம். அதன் பிறகு உண்மையை சொல்லி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணனை இயக்குனர் அணுகுகிறார். அதற்கு இதில் என்ன இருக்கிறது நான் பாடுகிறேன் என சொல்கிறார்.

(4 / 6)

அதன் பிறகு பாடலை எழுதுவதற்கு கண்ணதாசனை அணுகுகிறார் கே பி நாகராஜன். பின்னர் பாடலுக்கான காட்சியை கண்ணதாசனிடம் அவர் கூற ஓகே எழுதிவிடலாம் என கண்ணதாசன் சொல்கிறார். பின்னர் காலையில் அலுவலகத்திற்கு கண்ணதாசன் வருகிறார். காலை உணவை உண்கிறார். பின்னர் காட்சிக்கான பாடலை எழுத யோசிக்கிறார். ஆனால் பாடல் வரி அவருக்கு ஏற்றார் போல் வரவில்லை. பிறகு மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பிறகு பாடல் வரிகளை எழுத முயற்சிக்கிறார்.

(5 / 6)

ஆனாலும் முதல் வரி அவருக்கு வரவில்லை. இதைப் பார்த்த கேவிஎம் என்ன கவிஞரே இந்த பாடல் எழுத ஒரு நாள் போதுமா இல்லை இன்னும் வேண்டுமா என கேட்கிறார். இதைக் கேட்ட கண்ணதாசன் எனக்கு பாடல் வரி கிடைத்துவிட்டது என கூறி ஒருநாள் போதுமா என வரிகள் எழுத ஆரபித்து பாடலை முடிக்கிறார். இப்படி தான் இந்தப் பாடல் வரி உருவானது. இந்தப் பாடல் கதை படி தோற்றாலும் மக்கள் மனதில் வெற்றியடைந்த ஒரு பாடலாக தான் உள்ளது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்