Keerthy Suresh: சங்கீத் படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்.. காஜல் அகர்வாலின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?: படங்கள் உள்ளே
- கீர்த்தி சுரேஷ் வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) தனது திருமண விழாவின்போது எடுத்த சில படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் குறித்து காஜல் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
(1 / 8)
கீர்த்தி சுரேஷுக்கு ஆண்டனி தட்டில் என்பவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, கோவாவில் வைத்து திருமணம் நடந்தது. அந்த விழாவிற்கு முதல்நாள் சங்கீத் விழாவில் நடந்த வைபவங்களின் புகைப்படத் தொகுப்பு..
(2 / 8)
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்தின்போது நடந்த சங்கீத் விழாவின் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
(3 / 8)
கீர்த்தி சுரேஷ் இத்தகைய போட்டோஷீட்டின்போது, கொண்டை போட்டு தலையில் மல்லிகைப் பூ வைத்து கிளாஸிக் லுக்கில் இருந்தார்.
(4 / 8)
கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் குறித்து காஜல் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் உங்களது புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன, நீங்கள் இன்னும் பிரமிக்க வைக்கிறீர்கள் என கீர்த்தி சுரேஷ் தம்பதியினரை புகழ்ந்துள்ளார்.
(5 / 8)
கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் ஆகியோர் தங்கள் 15 வருட காதல் மற்றும் டேட்டிங்கிற்கு முழு முற்றுப்புள்ளி வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
மற்ற கேலரிக்கள்