தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kajal Aggarwal: ‘எங்கள ஏன் ஓரங்கட்டுறீங்க; நயன்தாராவுக்கு மட்டும்’- வெளுத்து வாங்கிய காஜல் அகர்வால்!

Kajal Aggarwal: ‘எங்கள ஏன் ஓரங்கட்டுறீங்க; நயன்தாராவுக்கு மட்டும்’- வெளுத்து வாங்கிய காஜல் அகர்வால்!

Jun 02, 2024 07:35 PM IST Kalyani Pandiyan S
Jun 02, 2024 07:35 PM , IST

Kajal Aggarwal: எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் முதன்மை கதாபாத்திரங்களில் நாங்கள் நடிப்போம். இவ்வளவு ஏன், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் கிடைத்தால் கூட ஏற்றுக்கொள்வோம். நிறைய விஷயங்கள் மாறி வருகின்றன. - காஜல் அகர்வால்!

Kajal Aggarwal: ‘நாங்க ஓரங்கப்படுறோம்; நயன்தாராவுக்கு மட்டும்’ - வெளுத்து வாங்கிய காஜல் அகர்வால்!

(1 / 5)

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2, சத்யபாமா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் திருமணத்திற்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். இவர் அண்மையில் கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.  

(2 / 5)

இது ஒரு கலாச்சார விஷயம் அல்லஅதில் அவர் பேசும் போது, “ இந்தியன் 2, சத்யபாமா உள்ளிட்ட திரைப்படங்களில், என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தாலும், தென் இந்தியாவில் திருமணமான நடிகர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இது ஒன்றும் தொன்று தொட்டு வரும் கலாச்சார விஷயம் அல்ல. இன்னும் இங்கு சில விஷயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. விரைவில் அதை நாங்கள் அகற்றுவோம். இந்த தலைமுறை நடிகர்கள்தான் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு வேலை செய்கிறார்கள். ஆகையால் இது ஒரு கலாச்சார விஷயம் கிடையாது. மக்கள் பார்வை மாறியிருக்கிறது. அவர்கள் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை ரசிக்கிறார்கள். பாலிவுட்டில் தீபிகா படுகோன், ஆலியாபட் ஆகியோருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள், தென்னிந்திய திருமணமான நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஆகையால்,தயாரிப்பாளர்கள் தங்களது தேர்வுகளை ஆராய வேண்டும்” என்று பேசினார்.   

(3 / 5)

'நயன்தாராவைப் பாருங்கள்'மேலும் பேசும் போது "எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் முதன்மை கதாபாத்திரங்களில் நாங்கள் நடிப்போம். இவ்வளவு ஏன், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் கிடைத்தால் கூட ஏற்றுக்கொள்வோம். நிறைய விஷயங்கள் மாறி வருகின்றன. உதாரணமாக, நயன்தாராவை எடுத்துக்கொள்ளலாம். அவர் அவரது திரைபயணத்தை அமைத்துக்கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.   

(4 / 5)

அவருடைய தேர்வுகள் என்னை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன. அவர் விதிவிலக்கானவர். அவர் அமைத்திருக்கும் விதிகளுக்கு உள்ளாகவே, அவருக்கு இது போன்ற விஷயங்கள் கிடைத்திருக்கிறது. அது உண்மையில் சிறப்பான விஷயம். எனக்கு கிடைத்திருக்கும் இந்த திரைப்பயணம் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்திருக்கிறது. காரணம் என்னுடைய இயக்குநர்களிடம் இருந்து எனக்கு அளவற்ற இறக்கம் கிடைத்திருக்கிறது.” என்று பேசினார்.  

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்