Kaakala yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 பேறுகளை தேடி கொடுக்கும் காகல யோகம் யாருக்கு? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
- Kaakala yogam: லக்னாதிபதி, 4ஆம் அதிபதி, 9ஆம் அதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் காகல யோகத்திற்கு தொடர்புடைய கிரகங்களாக அமைகின்றன. இந்த மூன்று கிரகங்களும், தங்களுக்குள் கேந்திரமாக அமைந்து, அதில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருக்கும் போது காகல யோகம் உண்டாகின்றது.
- Kaakala yogam: லக்னாதிபதி, 4ஆம் அதிபதி, 9ஆம் அதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் காகல யோகத்திற்கு தொடர்புடைய கிரகங்களாக அமைகின்றன. இந்த மூன்று கிரகங்களும், தங்களுக்குள் கேந்திரமாக அமைந்து, அதில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருக்கும் போது காகல யோகம் உண்டாகின்றது.
(1 / 7)
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன.
(2 / 7)
லக்னாதிபதி, 4ஆம் அதிபதி, 9ஆம் அதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் காகல யோகத்திற்கு தொடர்புடைய கிரகங்களாக அமைகின்றன.
(3 / 7)
இந்த மூன்று கிரகங்களும், தங்களுக்குள் கேந்திரமாக அமைந்து, அதில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று இருக்கும் போது காகல யோகம் உண்டாகின்றது.
(4 / 7)
இந்த மூன்று கிரகங்களும் ஒரே வீட்டில் இருப்பது, ஒரு கிரகம் ஒரு வீட்டிலும், மீதமுள்ள 2 கிரகங்களும் 4, 7, 10 ஆகிய இடங்களில் ஏதேனும் இரண்டு இடத்தில் இருப்பது, அல்லது மூவரும் 4, 7, 10 ஆகிய இடங்களில் இருப்பது காகல யோகம் உண்டாக காரணமாக அமைகிறது. அதே வேளையில் இந்த மூன்று கிரகங்களில் யாரேனும் ஒருவர் ஆட்சியோ, அல்லது உச்சமோ பெற்று இருப்பது அவசியம் ஆகும்.
(5 / 7)
இந்த யோகம் மூலம் ஜாதகருக்கு பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், தொழில் விருத்தி, முன்னேற்றம், சமுதாய தலைமை பொறுப்பு ஏற்பது ஆகிய நன்மைகளை ஏற்படுத்தும்.
(6 / 7)
வளர்ச்சி பாதையில் பயணிப்பது, தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் வளர்ப்பது, அதிகாரம் மிக்க சபைகளுக்கு தலைவர் ஆவது, கூட்டத்தை கட்டமைத்து வழிநடத்தி செல்வது, நேர்வழியில் நடப்பது, ஆலயங்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, நல்ல குழந்தை பேறு பெறுவது உள்ளிட்ட 16 சம்பத்துகளையும் காகல யோகம் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மற்ற கேலரிக்கள்