மேஷம் முதல் மீனம் வரை! ’புகழ் உடன் கூடிய கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா?’ 10ஆம் இட ரகசியங்கள்!
- தொழில், ஜீவனம், புகழ், தகப்பனின் தனம், விவசாயம், சுயதொழில், வியாபாரம், அரசு அதிகாரம், அரசியல்வாதியாகும் யோகம் உள்ளிட்டவற்றை 10ஆம் இடத்தை கொண்டு கணிக்கலாம்.
- தொழில், ஜீவனம், புகழ், தகப்பனின் தனம், விவசாயம், சுயதொழில், வியாபாரம், அரசு அதிகாரம், அரசியல்வாதியாகும் யோகம் உள்ளிட்டவற்றை 10ஆம் இடத்தை கொண்டு கணிக்கலாம்.
(1 / 9)
ஜோதிடத்தில் 10ஆம் இடம் என்பது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பிறவியில் எந்த கர்மாவை செய்து பிறவியை கழிக்க போகிறீர்கள் என்பதை 10ஆம் இடத்தை வைத்து கணிக்கலாம்.
(2 / 9)
10ஆம் இடத்திற்கு துணை புரியம் வீடுகளாக 2, 6 ஆகிய வீடுகள் உள்ளன. 2, 6, 10 ஆம் வீடுகள் அர்த்த திரிகோணம் என அழைக்கப்படுகின்றது.
(3 / 9)
தொழில், ஜீவனம், புகழ், தகப்பனின் தனம், விவசாயம், சுயதொழில், வியாபாரம், அரசு அதிகாரம், அரசியல்வாதியாகும் யோகம், அரசாங்கத்தில் பெரும் கௌரவம், அடிவயறு கோளாறுகள், வாழ்கை துணையின் சுக மேன்மைகள், மனைவி பெயரில் தொழில் செய்வது, கால்நடை வளர்ப்பு, செயல்திறன் ஆகியவை 10ஆம் இடத்தை அடிப்படையாக கொண்டே கணிக்கப்படுகின்றது.
(4 / 9)
ஒருவருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும் தகுதி உள்ளதா என்பதை 10ஆம் இடத்தை வைத்தே கணிக்க முடியும். கேந்திரங்களில் வலிமை மிகுந்த கோணமாக 10ஆம் இடம் உள்ளது.
(5 / 9)
ஒருவருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் தருவதில் 10ஆம் இடம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒருவருக்கு 10ஆம் இடத்தில் பாவகிரகம் இருந்து தசை நடத்தினால் மனைவியின் சுகம் கெடும்.
(6 / 9)
10ஆம் இடத்தில் சூரியன் இருந்தால் திக்பலம் கிடைக்கும். அரசுபதவி, மரியாதை, தகப்பனால் நன்மைகள், பரம்பரை தொழில் ஆகிய நன்மைகள் கிடைக்கும். சந்திரன் 10ஆம் இடத்தில் இருந்தால், விவசாயம், நீர், பயணம் சார்ந்த தொழில்கள் அமையும். தாய் மூலம் ஆதரவு கிடைக்கும். கவிதை, கதை, கட்டுரை மூலம் பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.
(7 / 9)
செவ்வாய் 10ஆம் வீட்டில் இருந்தால், திக்பலம் கிடைக்கும். மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள், அரசு பதவி, சீறுடை பணி, செங்கல், ரியல் எஸ்டேட், அசைவ உணவகம், சார்ந்த தொழில்கள் அமையும். புதன் 10ஆம் வீட்டில் இருந்தால், புத்திசாலித்தனம் மூலம் தனம் ஈட்டுவார்கள். திட்டமிடுதல், நிதி, வங்கி, கமிஷன், ஐ.டி துறை, புகைப்பட கலை சார்ந்த வேலைகள் அமையும். புதன் உடன் ராகு சேர்க்கை இருந்தால் சினிமாவில் லாபம் ஈட்டுவார்கள். பேச்சை மூலதனமாக கொண்டு செய்யப்படும் தொழில் மிகுந்த நன்மைகள் தரும்.
(8 / 9)
குரு பகவான் 10ஆம் இடத்தில் இருந்தால் பதவியை பறிப்பார் என்ற கூற்று தவறு. குரு 10இல் அமர்ந்தால் துறை சார்ந்த நிபுணர் ஆக ஜாதகர் இருப்பார். இருப்பினும், நீண்ட நாட்களுக்கு செய்த வேலையே செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. தானாகவே அடுத்தடுத்த வேலைகளை கற்றுக்கொள்வார்கள். சனி பகவான் 10ஆம் இடத்தில் இருந்தால் பதவியில் சிக்கல்கள் இருக்கும். சுய தொழில் புரிவோருக்கு வேலைக்காரர்களால் பிரச்னை இருக்கும். வேலை செய்வோருக்கு நிர்வாகத்துடன் பிரச்னைகள் இருக்கும். நீதிதுறைகளில் இவர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அமையும்.
(9 / 9)
10ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் கலைத் தொழிலில் ஈடுபாடு இருக்கும். பெண்களை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் வேலைகளில் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஜவுளி, ஆபரணம், சினிமா, ஊடகம், விளையாட்டு உபகரணம், அழகு கலை நிறுவனம், அழகுசாதன பொருட்கள் விற்பனை, கேட்ரிங், இண்டீரியர் அமைத்தல், வீடுகட்டி விற்பனை உள்ளிட்ட தொழில்கள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்